Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

The Ashes 2025: திருப்பி அடித்த இங்கிலாந்து.. ஆஸ்திரேலியா சொதப்பல் பேட்டிங்.. ஸ்டோக்ஸ் 5 விக்கெட்

பெர்த்: ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியாவின் பேட்டிங் படுமோசமாக அமைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தனர். முதல் ஓவரிலே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி டக் அவுட்டாக, பெண் டக்கட் 21 ரன்களிலும் ஜோ ரூட் டக்அவுட் ஆகியும் வெளியேறினர்.

Ashes 2025

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலி போப் 46 ரன்னில் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களில் ஸ்டார்க் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அந்த அணியின் இளம் நட்சத்திர வீரரான ஹாரி புரூக் மட்டும் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதேபோன்று ஜெமி ஸ்மித் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதில், 6 பவுண்டரிகள் அடங்கும்.

மற்ற கீழ் வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இங்கிலாந்து அணி 32.5 ஓவரில் 172 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடியது.

இங்கிலாந்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, ஆஸ்திரேலிய அணி பெரிய ஸ்கோரை குவிக்கப் போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ஜேக் வெதர்லேண்ட் டக் அவுட் ஆனார்.

மற்றொரு தொடக்க வீரரான மார்னஸ் 9 ரன்களில் வெளியேற உஸ்மான் கவாஜா 2 ரன்களில் ஆட்டம் இழந்தார் கேப்டன் ஸ்மித் வழக்கம் போல் பந்துகளை தடுத்து விளையாடி தனியாலாக போராடினார். ஆனால் 49 பந்துகளை மட்டுமே அவரால் எதிர்கொண்டு 17 ரன்களே சேர்க்க முடிந்தது. டிராவிஸ் ஹெட் 21 ரன்களிலும், கேமரான் கிரீன் 24 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 26 ரன்களிலும் சீரான இடைவெளியில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொருவரும் மிகவும் மோசமான கிரிக்கெட் ஷாட்டுகளை ஆடி தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஸ்டோக்ஸ் ஒவ்வொரு வீரர்களுக்கும் அபாரமாக ஃபில்டிங் செட் செய்து அதற்கு ஏற்ற வகையில் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 123 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 49 ரன்கள் குறைவாகும். களத்தில் நாதன் லயன் மற்றும் பிரண்டன் டொக்கட் ஆகியோர் உள்ளனர். சிறப்பாக பந்து வீசிய கேப்டன் ஸ்டோக்ஸ் 6 ஓவர் வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Story first published: Friday, November 21, 2025, 15:47 [IST]
Other articles published on Nov 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+