Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் 2025.. இங்கிலாந்தின் பேட்டிங்கை உடைத்த ஸ்டார்க்..7 விக்கெட் வீழ்த்தி அபாரம்.. 172 ரன்னில் அவுட்

பெர்த்: ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அதிரடியாக ஆட முற்பட்டு ஸ்டார்க் பந்தை கணிக்க முடியாமல் 21 ரன்களில் lbw ஆனார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் 7 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.

Ashes 2025

மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஆலி போப் 46 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புரூக் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க கடுமையாக போராடியது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களில் அவுட் ஆக ஹாரி புரூக் மட்டும் அரை சதம் அடித்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ஜெமி ஸ்மித் ஆறு பவுண்டரிகளை அடித்து 22 பந்துகளில் 33 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி வெறும் 32.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 172 ரன்களில் ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 58 ரன்களை விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதேபோன்று அறிமுக வீரரான பிராண்டன் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற கேமரான் கிரீன் ஒரு விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து வீரர்கள் கொஞ்சம் பொறுமை காத்து விளையாடி இருந்தால் நிச்சயம் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் அடித்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் வழக்கம் போல் வேகமாக விளையாடுகிறேன் என்ற பெயரில் ஆட்டம் இழந்தனர். தற்போது ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடுகிறது. இதில் தொடக்க வீரர் ஜேக் டக் அவுட் ஆக, அந்த அணி ரன் ஏதும் சேர்க்காத நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை பறி கொடுத்தது.

Story first published: Friday, November 21, 2025, 12:24 [IST]
Other articles published on Nov 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+