Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் 3வது டெஸ்ட் - 26 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட் இழந்த ஆஸி.. இங்கிலாந்து அபாரம்.. மார்ஷ் சதம்

லீட்ஸ் : பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து, 3வது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா வென்றால் தொடரை வென்றுவிடும்.

இதனால், வாழ்வா சாவா என்ற கட்டத்தில், இங்கிலாந்து அணி லீட்ஸ் டெஸ்டில் களமிறங்கி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் ஆண்டர்சன், டாங்கிற்கு ஓய்வு வழங்கப்பட்டு, கிறிஸ் வொக்ஸ் மற்றும் மார்க் வுட் சேர்க்கப்பட்டார். மோயின் அலியும் அணிக்கு திரும்பினார்.

Ashes 3rd test - Australia all out for 263 runs as Mitchell Marsh scores century

இங்கிலாந்த வீரர்கள் இந்த டெஸ்டில் அனல் பறக்க பந்துவீசினர். இதனை எதிர்கொள்ள முடியாமல் டேவிட் வார்னர் 4 ரன்களிலும், கவாஜா 13 ரன்களிலும், மார்னஸ் லாபஸ்சேன் 21 ரன்னிலும், ஸ்மித் 22 ரன்னிலும் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹேட் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இங்கிலாந்துக்கு பதிலடி தந்தார். 118 பந்துகளை எதிர்கொண்டு 118 ரன்களை அவர் சேர்த்தார். இதில் 17 பவுண்டரிகளும், 4 சிக்சரும் அடங்கும்.

டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுக்க, அதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எல்லாம் வந்த வேகத்தில் திரும்பினர். 23 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது. அபாரமாக பந்துவீசிய மார்க் வுட் 5 விக்கெட்டுகளை களமிறங்கினர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. களத்தில் ஜோ ரூட் மற்றும் பாரிஸ்டோ நிற்கின்றனர்.

Story first published: Thursday, July 6, 2023, 22:22 [IST]
Other articles published on Jul 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+