For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் 3வது டெஸ்ட் - பென் ஸ்டோக்ஸ் பேய் ஆட்டம்.. 5 சிக்சர், 6 பவுண்டரி அடித்து அபாரம்.. ஆஸி. முன்னிலை

லீட்ஸ் : ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்று இருக்கிறது. டாஸ் வென்று முதலில் வந்து வீசிய இங்கிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது.

இதனை அடுத்து மிட்செல் மார்ஸ் 118 பந்துகளில் 118 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருந்தது. 242 ரன்னில் இருந்து 263 ரன்கள் சேர்ப்பதற்குள் அந்த அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து சுருண்டது.

Ashes 3rd test - Ben stokes Fight backs alone as australia takes lead in first innings

இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. பென் டக்கட் 2 ரன்னிலும், ஹாரி புரூக் 3 ரன்களிலும் ஜாக் கிராலி 33 ரன்களிலும் வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ருட் 19 ரன்களிலும் ஜானி பாரிஸ்டோ 12 ரன்களிலும் மோயின் அலி 21 ரன்களிலும் வெளியேறின.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி கடுமையாக தடுமாறியது. எனினும் களத்தில் நின்ற கேப்டன் ஸ்டோக்ஸ் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். கைவசம் இருந்த விக்கெட்டுகளை வைத்து ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அருகே செல்ல வேண்டும் என்பதற்காக பென் ஸ்டோக்ஸ் t20 கிரிக்கெட் போல் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடினார்.

இதில் ஆறு பவுண்டரிகளும் ஐந்து இமாலய சிக்சர்களும் அடங்கும். இன்னும் 108 பந்துகளில் 80 ரன்கள் எடுத்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முர்ஃபி பந்தில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து 26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இதில் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் வெளியேற ஆஸ்திரேலிய அணி ஆறு புள்ளி இரண்டு ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை குறைந்தபட்ச ஸ்கோரில் வீழ்த்தினால் மட்டுமே இங்கிலாந்தால் வெற்றி பெற முடியும். இதனால் ஆஸ்திரேலியாவை 200 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்ற இலக்குடன் இங்கிலாந்து வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

Story first published: Friday, July 7, 2023, 20:03 [IST]
Other articles published on Jul 7, 2023
English summary
Ashes 3rd test - Ben stokes Fight backs alone as australia takes lead in first innings ஆஷஸ் 3வது டெஸ்ட் - பென் ஸ்டோக்ஸ் பேய் ஆட்டம்.. 5 சிக்சர், 6 பவுண்டரி அடித்து அபாரம்.. ஆஸி. முன்னிலை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+