Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் 4வது டெஸ்ட்.. இனி பிட்ச் பற்றி பேசவே கூடாது.. ஆஸ்திரேலியாவுக்கு தண்டனை வழங்கிய ஐசிசி

மெல்போர்ன்: மெல்போர்னில் நடந்த நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை "திருப்தியற்றது" என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆடுகளம் "பந்துவீச்சாளர்களுக்கு மிகச் சாதகமாக இருந்தது" எனப் போட்டி நடுவர் ஜெஃப் குரோவின் அறிக்கையை அடுத்து, மைதானத்திற்கு ஒரு டிமேரிட் புள்ளி வழங்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்குள்ளாக இங்கிலாந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தப் போட்டியில், முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் சரிந்தன. இதை அடுத்து, ஐசிசி "மெல்போர்ன் மைதானத்திற்கு ஒரு டிமேரிட் புள்ளி வழங்கப்பட்டது.

ஆறு டிமேரிட் புள்ளிகள் பெற்றால் 12 மாத கால தடை விதிக்கப்படும். இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடுவர், ஜெஃப் குரோவ் தனது முடிவை விளக்கினார்: "முதல் நாளில் 20, இரண்டாம் நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்து, ஒரு பேட்ஸ்மேன் கூட அரை சதம் அடிக்காததால், மெல்போர்ன் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு மிகச் சாதகமாக இருந்தது. ஐசிசி வழிகாட்டுதல்களின்படி இது 'திருப்தியற்றது'தான்."

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஆடுகளம் விளையாட்டுக்கு நல்லதல்ல என்றார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதை "வியாபாரத்திற்கு மோசமானது" என வர்ணித்தது. 142 ஓவர்களில் 36 விக்கெட்டுகள் வீழ்ந்ததையும், யாரும் 50 ரன்கள் எட்டாததையும் ரசிகர்கள் கண்டனர்.

2011-க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அடைந்த முதல் டெஸ்ட் வெற்றி இது. இருப்பினும், முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வென்று, ஆஸ்திரேலியா 3-0 என அசைக்க முடியாத முன்னிலையுடன் ஆஷஸ் தொடரை ஏற்கனவே தக்கவைத்தது. இத்தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 4 ஆம் தேதி தொடங்குகிறது.

Story first published: Monday, December 29, 2025, 15:09 [IST]
Other articles published on Dec 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+