Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் தொடரில் 6 நாள் குடி, கும்மாளம், கூத்து.. போதையில் தள்ளாடிய இங்கிலாந்து வீரர்கள்.. வெடித்த சர்ச்சை

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த பிறகு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான பென் டக்கெட், குடிபோதையில் ஹோட்டலுக்குத் போதையில் தடுமாறி சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

பிரிஸ்பேன் டெஸ்டுக்குப் பிறகு நுசாவுக்குச் சென்றிருந்த அணியின் ஓய்வு நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. X சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலானது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில் நடந்த நுசா பயணத்தைப் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ உறுதிப்படுத்திய சில மணிநேரங்களிலேயே இந்த வீடியோ வெளியானது.

Ben ducket

"பென் டக்கெட்டின் இந்த நடத்தை என்ன? அவர் அதிகமாகக் குடித்துவிட்டு சுயநினைவின்றி இருந்தார். இது ஏமாற்றமளிக்கும் அணுகுமுறை என்று இங்கிலாந்து ரசிகர்கள் சாடியுள்ளனர். நுசாவில் கழித்த நான்கு நாட்கள் விடுமுறை அல்ல என்றும், வீரர்களைப் புத்துணர்வூட்டுவதற்காக பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் இதை முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தார் என்றும் ECB முன்னதாக வலியுறுத்தியிருந்தது.

இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ, நுசா பயணத்தில் அணியுடன் செல்லவில்லை. அடிலெய்டு டெஸ்டில் இங்கிலாந்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, இங்கிலாந்து வீரர்களின் நுசா பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பேசிய கீ, அந்த ஓய்வு நேரத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து, ஏதேனும் நடவடிக்கை தேவையா என்று முடிவு செய்வேன் என்று கூறினார்.

"எங்கள் வீரர்கள் வெளியே சென்று அதிகமாகக் குடித்தார்கள் என்று மக்கள் சொல்வதாகத் தெரிந்தால், நிச்சயமாக நாங்கள் அதைப் பற்றி விசாரிப்போம்.
ஒரு சர்வதேச கிரிக்கெட் அணி அதிகமாக மது அருந்துவது, நான் எந்தச் சூழ்நிலையிலும் எதிர்பார்க்கக்கூடியது அல்ல, மேலும் அங்கு என்ன நடந்ததென்று விசாரிக்காமல் இருப்பது ஒரு தவறு.

ஆனால், நான் இதுவரை கேள்விப்பட்ட அனைத்தின்படி, அவர்கள் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்கள். கடந்த ஓரிரு நாட்களில் எழுதப்பட்டுள்ள செய்திகளை நான் படித்தேன், அவர்கள் அதிகமாகக் குடித்தார்கள் என்றால், அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் மது அருந்துபவன் அல்ல. மது அருந்தும் கலாச்சாரம் யாருக்கும் எந்த வகையிலும் உதவாது என்று நான் நினைக்கிறேன்"

"நுசா பயணம், ஓய்வு எடுத்து, உங்களது தொலைபேசியைத் தூக்கி எறிந்துவிட்டு, வேலைகளைப் போட்டுவிட்டு, கடற்கரைக்குச் செல்வதாக இருந்தால், எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் இதுவரை கேள்விப்பட்ட அனைத்தின்படி, அவர்கள் அமர்ந்து சாப்பிட்டார்கள், இரவு உணவு அருந்தினார்கள், தாமதமாக வெளியே செல்லவில்லை, அவ்வப்போது மது அருந்தினார்கள்." என்று கூறினார்.

இது குறித்து ECB வெளியிட்ட அறிக்கையில், "சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ பற்றி நாங்கள் அறிவோம். நாங்கள் நடத்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். விசாரணையில், அது உண்மை என தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம். உண்மைகளை நாங்கள் கண்டறியும் வரை இந்த கட்டத்தில் மேலும் கருத்து தெரிவிக்க மாட்டோம்" என்று அந்த அறிக்கை முடிவடைந்தது.

டக்கெட் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆறு இன்னிங்ஸ்களில் 16.16 சராசரியில் வெறும் 97 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 29 ரன்கள், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூட இவரை விட அதிக ரன்கள் எடுத்திருந்தார்.

31 வயதான டக்கெட் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இருந்தபோது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தார். அப்போது பெர்த்தில் ஒரு பாரில் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது மதுபானத்தை ஊற்றியதற்காக ECB ஆல் அபராதம் விதிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 24, 2025, 19:14 [IST]
Other articles published on Dec 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+