Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் 5வது டெஸ்ட்.. இங்கிலாந்து அணி 12 பேர் கொண்ட வீரர்களை அறிவித்தது.. 2 பேர் மாற்றம்

லண்டன்: 2025-26 ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் தசைப்பிடிப்பு காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் அணியிலிருந்து விலக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பாட்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் தொடரில் இருவரும் இதுவரை களமிறங்கவில்லை.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்தது. எனினும், பாக்ஸிங் டே டெஸ்டில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஒரு பரபரப்பான வெற்றியைப் பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில், 2010-11 சுற்றுப்பயணத்திற்குப் பின் இங்கிலாந்தின் முதல் டெஸ்ட் வெற்றியானது இது.

இதன் மூலம் தொடர் ஒயிட்வாஷ் தவிர்க்கப்பட்டது. இந்தப் போட்டியில் ஜோஷ் டங் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார், முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.சிட்னி மைதானம் பாரம்பரியமாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால், இங்கிலாந்து அணி ஷோயப் பஷீர் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களைக் களமிறக்க வாய்ப்புள்ளது. ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி வருமாறு:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டங்.2021-22 ஆஷஸ் தொடரின்போது ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் இறுதியாக சிட்னியில் சந்தித்தன. அச்சமயம் ஆஸ்திரேலியா முதல் மூன்று டெஸ்டுகளையும் வென்றதால், தொடரின் முடிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அப்போட்டியில் உஸ்மான் கவாஜா அடித்த அற்புதமான 137 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416/8 என்ற பெரிய ஸ்கோரை எடுத்தது.இதற்கு பதிலளித்த இங்கிலாந்து அணி, ஜானி பேர்ஸ்டோவின் அபாரமான 113 ரன்கள் இருந்தபோதிலும், 294 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 265/6 எடுத்து, இங்கிலாந்துக்கு 388 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது.

வெற்றிபெற முடியாத இலக்கை நோக்கிப் போராடிய இங்கிலாந்து, கடைசி நாளில் 102 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இந்த டிரா, அந்தத் தொடரில் ஒரு ஒயிட்வாஷ் தோல்வியைத் தவிர்க்க இங்கிலாந்துக்கு உதவியது. இருப்பினும், ஹோபார்ட்டில் நடந்த இறுதிப் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, 2021/22 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 4-0 என வென்றது.

Story first published: Friday, January 2, 2026, 17:26 [IST]
Other articles published on Jan 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+