Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs ENG: ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் படைத்த மோசமான சாதனை.. இங்கிலாந்துக்கு மீண்டும் அவமானம்

சிட்னி: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்கால ஜாம்பவான் என்று போற்றப்படும் ஜோ ரூட், கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் செய்ய விரும்பாத ஒரு மோசமான சாதனையைத் தன் பெயரில் பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 5-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்ததன் மூலம், "ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக டெஸ்ட் தோல்விகளைச் சந்தித்த வீரர்" என்ற சோகமான சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற 2025-26 ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இது ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் சந்திக்கும் 16-வது டெஸ்ட் தோல்வி ஆகும். 149 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் 16 போட்டிகளில் தோற்றதில்லை.

இதற்கு முன்பு, இங்கிலாந்து வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் அலைஸ்டர் குக் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் தலா 15 போட்டிகளில் தோற்று முதலிடத்தில் இருந்தனர். தற்போது அவர்களைப் பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் இந்தத் தேவையற்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Ashes Joe Root Scripts Unwanted History Most Test Defeats on Australian Soil

ஜோ ரூட்டின் ஆஸ்திரேலிய பயணம்

ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் மட்டும் 20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 16 தோல்வி அடைந்து இருக்கிறார். இதில் இந்த முறை நடந்த ஆஷஸ் தொடரில் மெல்போர்ன் போட்டியில் மட்டுமே ஜோ ரூட் வெற்றி பெற்றார். மூன்று போட்டிகள் டிராவில் முடிந்தன.

ஜோ ரூட் 2013, 2017, 2021 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நான்கு தொடர்களிலும் இங்கிலாந்து அணி தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக தோல்விகளைச் சந்தித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான்களும் உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 14 தோல்விகள் சந்தித்துள்ளார். விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் தலா 11 தோல்விகளை சந்தித்து உள்ளனர்.

கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் மிகச் சிறப்பாக விளையாடி 160 ரன்களைக் குவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை நோக்கி முன்னேறி வரும் ரூட்டிற்கு, ஆஸ்திரேலியாவில் வெற்றிகளைப் பெறுவது மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

Story first published: Thursday, January 8, 2026, 17:23 [IST]
Other articles published on Jan 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+