Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ashes: 32 ஆண்டுகால உலக சாதனை சுக்குநூறு.. வக்கார் யூனிஸின் ரெக்கார்டை உடைத்த மிட்செல் ஸ்டார்க்

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். பாகிஸ்தான் பந்துவீச்சு ஜாம்பவான் வக்கார் யூனிஸ் வைத்திருந்த 32 ஆண்டுகால உலக சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளது கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு காலண்டர் ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) குறைந்தது 50 விக்கெட்டுகளையாவது வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், மிகக்குறைந்த பந்துகளில் விக்கெட்டை வீழ்த்தியவர் (Best Bowling Strike Rate) என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார்.

Ashes Mitchell Starc Breaks Waqar Younis 32-Year Record for Best Test Strike Rate in a Calendar Year

மிட்செல் ஸ்டார்க் 2025-ஆம்ஆண்டில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் 28.3 ஆகும். அதாவது, சராசரியாக ஒவ்வொரு 28 பந்துகளுக்கும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு, 1993-ம் ஆண்டு பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, அவரது ஸ்ட்ரைக் ரேட் 29.5 ஆக இருந்தது.

கடந்த 32 ஆண்டுகளாக, ஒரு ஆண்டில் 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து, 30-க்கு குறைவான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த ஒரே வீரராக வக்கார் யூனிஸ் மட்டுமே இருந்தார். அந்த சாதனையை இப்போது மிட்செல் ஸ்டார்க் முறியடித்து முதலிடத்தைப் பிடித்துவிட்டார்.

2025 - ஸ்டார்க்கின் ஆதிக்க ஆண்டு

35 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், 2025-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த ஆண்டு அவர் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளிலும் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கைக்கு எதிரான தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பயணத்திலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வேட்டையாடினார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸின் கிங்ஸ்டவுனில் நடந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா தோல்வியடைந்தாலும், ஸ்டார்க் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பங்களிப்பை அளித்தார்.

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஸ்டார்க் விக்கெட் வேட்டையாடி வருகிறார். பெர்த் டெஸ்டில் 7 விக்கெட்டுகளையும், பிரிஸ்பேனில் 8 விக்கெட்டுகளையும், அடிலெய்டில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டிலும் 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

ஒரு ஆண்டில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட முதல் 5 பந்துவீச்சாளர்கள் (குறைந்தபட்சம் 50 விக்கெட்டுகள்) -

மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 2025: ஸ்ட்ரைக் ரேட் 28.3
வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்) - 1993: ஸ்ட்ரைக் ரேட் 29.5
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 2024: ஸ்ட்ரைக் ரேட் 30.1
கஸ் அட்கின்சன் (இங்கிலாந்து) - 2024: ஸ்ட்ரைக் ரேட் 35.6
டேல் ஸ்டெய்ன் (தென்னாப்பிரிக்கா): ஸ்ட்ரைக் ரேட் 35.8

வயது ஆக ஆக வேகம் குறையும் என்று கருதப்படும் நிலையில், 35 வயதில் மிட்செல் ஸ்டார்க் இத்தகைய அசுர வேகத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருவது இளம் வீரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

Story first published: Sunday, December 28, 2025, 10:31 [IST]
Other articles published on Dec 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+