Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் டெஸ்ட் : டி-20 உலகக் கோப்பை வென்ற ஆஸி. ஹீரோக்களுக்கு கல்தா.. பலருக்கு அணியில் இடமில்லை!

மெல்போர்ன்: கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் போது உலகம் முழுவதும் ரசிகர்கள் எப்படி எதிர்பார்ப்பார்களோ, அதற்கு சற்றும் குறையாத டெஸ்ட் தொடர் தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர்.

Recommended Video

Australia's squad for the Ashes 2021-22 | OneIndia Tamil

இன்னும் சொல்லப் போனால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இல்லாததற்கு முன்பே, கிரிக்கெட் ரசிகர்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடரை எதிர்பார்பார்கள் .

சுமார் 138 ஆண்டுகளாக நடைபெறும் இந்த தொடரை வெல்லவில்லை என்றால் இரு நாட்டுக்குமே இது மான பிரச்சினை.

ஆஷஸ் தொடர்

ஆஷஸ் தொடர்

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆஷஸ் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

மிட்செல் மார்ஷ்

மிட்செல் மார்ஷ்

டிம் பெய்ன் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி-20 உலகக் கோப்பை தொடர் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் ஆஷஸ் தொடரில் சேர்க்கப்படவில்லை. மாறாக இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் மோதும் ஆஸ்திரேலிய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய உள்ளூர் டெஸ்ட் போட்டியில் மிட்செல் மார்ஷ் நடப்பாண்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேத்தீவ் வேட்

மேத்தீவ் வேட்

இதே போன்று ஆஸ்திரேலியாவின் மற்றொரு ஹீரோவான மேத்தீவ் வேட் ஆஷஸ் தொடரில் இடம்பெறவில்லை.டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் உள்ள மேத்தீவ் வேட் ஓரங்கட்டப்பட்டார்.ஆனால் அனுபவ வீரர் உஸ்மான் கவாஜா, ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய அணியில் தேர்வாகியுள்ளனர்.

 ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி

டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ்(துணை கேப்டன்), கேமரான் கிரீன்,ஜாஸ் ஹேசல்வுட், மார்கஸ் ஹாரிஸ்( தொடக்க வீரர்), டிராவிஸ் ஹேட் (விக்கெட் கீப்பர்),உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேங், லயான், மைக்கேல் நேசர், ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்விப்சன், டேவிட் வார்னர்

Story first published: Wednesday, November 17, 2021, 19:57 [IST]
Other articles published on Nov 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+