1 மணி நேரம் பேட்டிங்..! எடுத்தது ஒரே ரன்..! ஸ்பான்சர் அளித்த லைப்டைம் பரிசு..! இது ஆஷஸ் அற்புதம்
Recommended Video
லண்டன்: இங்கிலாந்து வீரர் ஜாக் லீச்சுக்கு வாழ்நாள் முழுதும் இலவசமாக கண்ணாடி வழங்க ஆஷஸ் ஸ்பான்சர் நிறுவனமான ஸ்பெக்சேவர்ஸ் முன் வந்துள்ளது.
இங்கிலாந்தில் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸி. வென்றது. 2வது போட்டி சமனானது. 3வது டெஸ்ட் போட்டியில், பென் ஸ்டோக்ஸ் மிரட்டல் அடி கைகொடுக்க, இங்கிலாந்து வரலாற்று வெற்றி பெற்றது.
இந்த டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்சின் மரண மாஸ் ஆட்டம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், பெஸ்ட் இன்னிங்சாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் இந்த அசத்தல் வெற்றியில் 11வது வீரராக களமிறங்கிய ஜாக் லீச்சுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

களத்தில் உறுதுணை
ஏன் என்றால் கடைசிவிக்கெட்டுக்காக பென் ஸ்டோக்சுடன் களத்தில் நின்று உறுதுணையாக இருந்தவர். ஸ்டோக்ஸ் ஒருபுறம் அதிரடி காட்டினாலும் , மறுபுறம் ஆஸ்திரேலிய பவுலர்களை எளிதாக சமாளித்து ஆடினார் லீச்.

விக்கெட்டை காப்பாற்றினார்
அவர் சொதப்பி தள்ளியிருந்தால், ஸ்டோக்ஸ் போராட்டம் வீணாகியிருக்கும். அணியின் இக்கட்டான நிலைமையை உணர்ந்து, மிக சிறப்பாக தனது விக்கெட்டை ஆஸி.யிடம் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

கண்ணாடி
அந்த ஆட்டத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய விஷயம் கண் முன் வந்து போயிருக்கும். ஒவ்வொரு பந்தை எதிர்கொள்ளும் முன்பும் ஜாக் லீச், தனது மூக்கு கண்ணாடியை கழட்டி துடைப்பார்.
ஏஜென்ட் யார்?
அதன் பின்னரே ஆட தொடங்குவார். அதைப்பார்த்த ஆஷஸ் தொடரின் ஸ்பான்சர் நிறுவனமான ஸ்பெக் சேவர்ஸ், போட்டிக்கு பின், யாருக்காவது ஜாக் லீச்சின் ஏஜென்ட் தெரியுமா? என்று ட்வீட்டரில் ஒரு மெசேஜை தட்டிவிட்டது.

ஸ்டோக்ஸ் வேண்டுகோள்
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சும், வாழ்க்கை முழுவதும் ஜாக் லீச்சுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்க முடியுமா? என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்பெக்சேவர்ஸ் இலவசமாக கண்ணாடி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
பென் டோக்ஸ் ஒருபுறத்தில் ஆஸி.யின் பவுலிங்கை அடித்து துவைத்து காய போட, மறு முனையில் அமைதியாக தமது ஆதரவை தெரிவித்து, விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டவர் ஜாக் லீச். அவர் ஒரு மணி நேரத்தில் எடுத்தது என்னவோ ஒரு ரன் தான். ஆனால் அவர் தனது விக்கெட்டை காப்பற்றியதற்காகவே இந்த வாழ்நாள் பரிசு கிடைத்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications