For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் டெஸ்ட் 2023 - தொடக்கமே இங்கிலாந்துக்கு சாதகம்.. ஆஸி. அணியில் முக்கிய வீரர் இல்லை

பர்மிங்காம் : பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெற்றி பெற வேண்டிய உத்வேகத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் உள்ளனர்.

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த தொடரில் இங்கிலாந்து அணி 4 க்கு 0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் ஆஷஸ் கோப்பையை மீட்கும் முனைப்புடன் அவர்கள் இருக்கிறார்கள்.

Ashes test 2023 - England won the crucial toss vs England in first test

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதனால் வரலாற்றை மாற்றும் முனைப்புடன் அவர்களும் களமிறங்குகிறார்கள். இந்த நிலையில் பர்மிங்காமல் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பது போல் தெரிகிறது. இதனால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். இங்கிலாந்து அணிக்காக இங்கு விளையாடுவதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஆசஸ் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்று பிறகு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன தருணம் ஆகும்.

கடந்த காலங்களில் நாங்கள் நன்றாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். மோயின் அலி அணிக்கு திரும்பிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் ஜாக் லீச் காயம் காரணமாக இடம் பெறாதது துரதிர்ஷ்டவசமானது தான். மோயின் அலி சிறப்பான ஆட்டத்தை கடந்த காலங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய வருகையால் அணியின் பலம் அதிகரித்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், நாங்களும் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய தான் முடிவெடுத்திருந்தோம்.

எங்களுடைய அணியில் மிச்செல் ஸ்டார்க் பதிலாக ஹேசல்வுட் இடம் பெற்றிருக்கிறார்.ஸ்டார்க் கடந்த ஆட்டத்தில் நன்றாக தான் பந்து வீசினார். எனினும் ஹேசல்வுட் போன்ற ஒரு வீரர் எங்கள் அணிக்கு தேவை பந்துவீச்சாளர்களின் பணி சுமையையும் நாங்கள் கண்காணிக்க வேண்டியது இருக்கிறது. உலக டெஸ்ட் பைனலை நாங்கள் வென்றது இந்த தொடருக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. இங்கிலாந்த அணி எங்களுக்கு சவாலை அளிப்பார்கள் என்று தெரியும். இந்த போட்டிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, June 16, 2023, 15:30 [IST]
Other articles published on Jun 16, 2023
English summary
Ashes test 2023 - England won the crucial toss vs England in first test ஆஷஸ் டெஸ்ட் 2023 - தொடக்கமே இங்கிலாந்துக்கு சாதகம்.. ஆஸி. அணியில் முக்கிய வீரர் இல்லை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+