ஆஷஸ் 2வது டெஸ்ட் - இங்கிலாந்தின் வாயிலேயே மிதித்த ஆஸ்திரேலியா.. தோல்வியை தவிர்க்க ஆஸி போராட்டம்
லண்டன் : பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தியது. கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் ஸ்மித் சதம் விளாசினார். டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் அரைசதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 279 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து வலுன நிலையில் இருந்தது. ஆனால் 3வது நாளில் ஒரே செஷனில் 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து 91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் விளையாடியது.
130 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்தது. உஸ்மான் கவாஜா 77 ரன்களும், ஸ்மித் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அலெக்ஸ் கேரி 21 ரன்களும், கேமிரான் கிரீன் 18 ரன்களும் வெளியேறினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஷாக் கிராலி 3 ரன்களிலும், ஆலிவ் போப் 3 ரன்களிலும் வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 18 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கட் அரைசதம் கடந்த நிலையில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 113 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்பட, இங்கிலாந்தின் வெற்றிக்கு 258 ரன்கள் தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications