Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'நள்ளிரவு 1மணிக்கு ஸ்மித் செய்த விசித்திரம்' ரகசியமாக வீடியோ வெளியிட்ட மனைவி.. என்ன கொடுமை சார் இது

ஓவல்: ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், நள்ளிரவு 1 மணிக்கு செய்த விநோத விஷயம் இணையத்தில் படுவேகமாக கலக்கி வருகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இரண்டு போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணி தான் வெற்றி நடைபோட்டு வருகிறது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர்

ஆஷஸ் டெஸ்ட் தொடர்

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி எவ்வளவு பரபரப்பாக இருக்குமோ, அதே போன்று தான் இந்த ஆஷஸ் தொடரும் பார்க்கப்படுகிறது. கவுரவ பிரச்சினையாக இருக்கும் என்பதால் இரு நாட்டு வீரர்களும் வெற்றிக்காக மிகக் கடுமையாக போராடுவார்கள். அப்படி இந்த தொடரில் சாதிக்க ஸ்டீவ் ஸ்மித் செய்த விஷயம் தான் பேசுப்பொருளாகியுள்ளது.

 ஸ்மித்தின் செயல்

ஸ்மித்தின் செயல்

2வது டெஸ்ட் போட்டி ஓவலில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கான பரபரப்பில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளார். உடனடியாக தனது பேட்டை எடுத்து, அனைத்தும் சரியாக உள்ளதா, என்பதை பார்த்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

பயந்த மனைவி

பயந்த மனைவி

தூக்க கலக்கத்தில் இதனை கண்டு பயந்துப்போன ஸ்மித்தின் மனைவி டேனி வில்லிஸ், அதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டார். இதனையடுத்து அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ஒரு வீரர் இப்படியும் ஆர்வக்கோளாறாக இருப்பாரா என ஆச்சரியமடைந்துள்ளனர்.

கேப்டன்சி

கேப்டன்சி

இந்த 2வது டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டிருந்ததால், ஸ்டீவ் ஸ்மித்திற்கு கேப்டன் பதவி கிடைத்தது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த ஸ்மித்திற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கவனமாக இருந்தார். அதன்படியே சதமடித்து அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்துள்ளார். இதன் மூலம் அந்த அணி 2- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Story first published: Monday, December 20, 2021, 20:34 [IST]
Other articles published on Dec 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+