Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நெஹ்ரா..பிட்ச் குறித்து புகார்..குறுக்கு வழியில் சாம்பியனாக பிளான்

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே குஜராத் அணிகள் மோதிய இறுதிப்போட்டி மழையால் தடைபட்டுள்ள நிலையில் நடுவருடன் நெஹ்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாஸ் வென்ற தோனி மழை பெய்யும் என்ற காரணத்தினால் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதனை அடுத்து குஜராத் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

Ashish Nehra argues with umpires about condition of the ground

இதனை அடுத்து சிஎஸ்கே அணி முதல் ஓவரின் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மழை நின்ற பிறகும் ஆடுகளம் ஈரமாக இருந்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஈரமான பகுதிகளை சரி செய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மழை பெய்திருப்பதால் தற்போது ஆடுகளம் ஈரமாக இருக்கும். இது குஜராத் அணிக்கு பாதகமாகவும் சிஎஸ்கே அணிக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. மேலும் ஐந்து ஓவர்களில் சிஎஸ்கே அணி 40 ரன்களை தாண்டி இருந்தாலே அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். இது குஜராத் அணிக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் ஆடுகளத்தை சோதனை செய்ய வந்த நடுவர்களிடம் போட்டியை தொடங்கக்கூடாது என நெஹ்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது காலால் ஆடுகளத்தை தேய்த்து பாருங்கள் எவ்வளவு ஈரமாக இருக்கிறது. இதனால் போட்டியை நடத்தாதீர்கள் என அவர் கோபமாக பேசி விட்டு சென்றார்.

Story first published: Monday, May 29, 2023, 23:56 [IST]
Other articles published on May 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+