Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூரியகுமார் யாதவால் பல வீரர்களுக்கு ஆபத்திருப்பதாக இந்திய அணி முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஸ் நெஹ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

32 வயதான சூரியகுமார் தற்போது டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக வலம் வருகிறார். ஆனால் சூரிய குமாரால் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இதுவரை 20 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள சூர்யகுமார் வெறும் 43 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 28 ரன்கள் தான்.

நெஹ்ரா நம்பிக்கை

நெஹ்ரா நம்பிக்கை

சூரிய குமாரியாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் 2 அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். இந்த நிலையில் சூரிய குமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கியமான வீரராக வாய்ப்பிருப்பதாக ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சூரியகுமார் தன்னுடைய பார்மை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் வெளிப்படுத்துவார் என நான் நம்புகிறேன்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஏனென்றால் அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. அவர் சில ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஒரு நாள் கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்தி அவருக்கென ஒரு இடத்தை பிடிப்பார். இதனால் பல வீரர்கள் அவர்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி தங்களுடைய ஆட்டத்திறனை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆச்சரியமில்லை

ஆச்சரியமில்லை

இல்லை என்றால் அவருடைய இடத்தை சூரிய குமார் யாதவ் பிடித்துக் கொள்ள தயாராக இருக்கிறார். சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரராக ஐசிசி விருது வழங்கி இருப்பது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் சூரிய குமார் யாதவ் மட்டும் தான் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார்.

சாதனை

சாதனை

தொடர்ந்து இதே போன்ற பார்மை அவர் வெளிப்படுத்துவார் என நான் நம்புகிறேன். பெரிய ஸ்ட்ரைக் ரைட்டை வைத்து தொடர்ந்து ரன் குவிப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. சூரிய குமார் யாதவ்க்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இப்படி விளையாடுவது நிச்சயம் பெரும் சாதனையாகவே நான் கருதுகிறேன். டி20 கிரிக்கெட் இருக்கும் பல அதிரடி வீரர்களை சூர்யகுமார் யாதவ் பின்னுக்கு தள்ளி இருக்கிறார். என்று ஆஷிஸ் நெஹ்ரா பாராட்டியுள்ளார்.

Story first published: Friday, January 27, 2023, 10:43 [IST]
Other articles published on Jan 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+