Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் ஒன்னும் அவ்வளவு முக்கியமில்ல.. ரிஷப் பண்ட் மீதான எதிர்பார்ப்புகள்.. கடுப்பான ஆஷிஷ் நெஹ்ரா!

மும்பை: இந்திய அணியில் ரிஷப் பண்ட் இருந்தே தீர வேண்டும் என்று கிடையாது என முன்னாள் வீரர் அஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

Recommended Video

Rahul Dravid-க்கு வந்த சோதனை! India அணிக்கு மிகப்பெரிய சவால் | *Cricket

தென்னாப்பிரிக்க தொடர் முடிவடைந்ததை அடுத்து இந்திய அணி அடுத்த தொடர்களுக்கு தயாராகி வருகிறது.

இந்த தொடரின் முடிவில் கேப்டன் ரிஷப் பண்ட் தான் தற்போது பேசுப்பொருளாக இருந்து வருகிறார்.

 ரிஷப் பண்ட் சொதப்பல்

ரிஷப் பண்ட் சொதப்பல்

ஒரு கேப்டனாக நல்ல கம்பேக் கொடுத்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக படுமோசமாக சொதப்பியுள்ளார் 5 போட்டிகளில் வெறும் 57 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் ஷாட் தேர்வுகளும் மோசமாக உள்ளன. எனவே அவரை நிச்சயம் டி20 உலகக்கோப்பைக்கு சேர்த்தே தீர வேண்டுமா, அவரை நீக்கிவிடுங்கள் என ரசிகர்களும், வல்லுநர்களும் கூறி வருகின்றனர்.

நெஹ்ராவின் கருத்து

நெஹ்ராவின் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் அஷிஷ் நெஹ்ரா பேசியுள்ளார். அதில், " ரிஷப் பண்ட் இல்லாமல் இந்திய டி20 அணி விளையாடுமா என கேள்விகள் உலா வருகிறது. ஏன் அது முடியாதா??. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. நிச்சயம் அவர் அணியில் இடம்பெறுவார் என எந்தவொரு முத்திரையும் பதிக்கவில்லை. அவருக்கும் காயங்கள் ஏற்படலாம். உலகக்கோப்பைக்கு முன்னதாக 10 டி20 போட்டிகள் மற்றும் ஆசியக்கோப்பை தொடர் உள்ளது.

மாற்று யார்?

மாற்று யார்?

பண்ட்-ஐ முதல் நாளில் இருந்து பார்த்து வருகிறோம். முதலில் சொதப்பிய போது வெளியேற்றப்பட்டார். ஆனால் மீண்டும் வந்து தனக்கென தனி தடத்தை உருவாக்கிக்கொண்டார். எனினும் அவர் தனது டி20 கிரிக்கெட் ரன்களை நினைத்து கவலைப்படுவார். பண்ட்-க்கு மாற்றாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர் என நெஹ்ரா கூறியுள்ளார்.

டிராவிட்டின் பதில்

டிராவிட்டின் பதில்

பண்ட்-கான வாய்ப்பு குறித்து பேசிய டிராவிட், டி20 உலகக்கோப்பைக்கான எனது திட்டத்தில் ரிஷப் பண்ட் தான் முக்கிய பங்காக இருக்கிறார். மிடில் ஓவர்களில் அவரின் அதிரடிகள் தேவை. எனவே ஓரிரு போட்டிகளை வைத்து அவரை புறக்கணிக்க மாட்டோம் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 20, 2022, 20:34 [IST]
Other articles published on Jun 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+