இறுதிப் போட்டியில் ஆசிஷ்நெஹ்ரா விளையாட மாட்டார்
மும்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வேகப் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா காயம் காரணமாக இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என கேப்டன் டோணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டோணி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வலது கையின் விரலில் பலமான காயம்ஏற்பட்டுள்ளதால், நெஹ்ரா விளையாட வாய்ப்பில்லை என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது அருமையான கேட்ச் ஒன்றை பிடிக்க முயன்றபோது கையில் காயம் ஏற்பட்டது நெஹ்ராவுக்கு. அந்தக் காயம் தற்போது அவரை இறுதிப் போட்டியில் விளையாட முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது.
அதேசமயம், அதே போட்டியில் காயமடைந்த கெளதம் கம்பீர் தற்போது குணமடைந்துள்ளதாகவும்,அவர் விளையாடுவார் என்றும் டோணி கூறியுள்ளார்.
நெஹ்ராவுக்குப் பதில் யார் சேர்க்கப்படுவார் என்ற கேள்விக்கு டோணி பதிலளிக்கையில், மும்பை விக்கெட் லேசான பவுன்ஸைக் கொடுக்கும். எனவே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்பது நல்ல யோசனைதான். இருப்பினும் விக்கெட் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாக மாறும் என்று அணியினர் கருதினால் சநதேகமில்லாமல் அஸ்வினை சேர்ப்பேன் என்றார் அவர்.
இலங்கை அணியில் மாத்யூஸ் கிடையாது
இதற்கிடையே, இலங்கை அணியில் ஏஞ்சலா மேத்யூஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் முரளிதரன் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முரளிதரன், மாத்யூஸ் இருவரும் காயமடைந்திருந்ததால் அவர்களுக்குப் பதில் சமிந்தா வாஸ் மற்றும் சூரஜ் ரந்திவ் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது வாஸ் மட்டும் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஸ் கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட்டே ஆடவில்லை. கடைசியாக 2008ம் ஆண்டு அவர் ஆடியிருந்தார். கடந்த 1996ல் இலங்கை உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்தவர் வாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:படங்கள் India vs Srilanka
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications