Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இவர்களுக்கு தான்பா வாய்ப்பு”.. டி20 உலகக்கோப்பைகான இந்திய அணி.. ஆஷிஸ் நெஹ்ரா கணிப்பு!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்காக 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா உருவாக்கியுள்ளார்.

இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால், ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இதனையடுத்து ரசிகர்கள் அனைவரின் பார்வையும் டி20 உலகக்கோப்பை தொடரின் பக்கம் திரும்பியுள்ளது.

 டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். அந்தவகையில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ர்சிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதுகுறித்து, பேசியிருந்த ரோகித் சர்மா ஆசியகோப்பை அணியில் இருக்கும் 90% வீரர்கள் டி20 உலகக்கோப்பை அணியிலும் இருப்பார்கள் என தெரிவித்தார்.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இந்நிலையில், முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா தனது கணிப்பின்படி அணியை உருவாக்கியுள்ளார். அதில், ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி ஓப்பனராக நல்ல ஃபார்மில் இருப்பதால் 3வது ஓப்பனரை நெஹ்ரா தேர்வு செய்யவில்லை. மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அவர் தேர்வு செய்துள்ளார். ஆனால் இதில் ஜடேஜா காயம் காரணமாக விலகியதாக தெரிகிறது. சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சாஹல் , ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இளம் வீரர் ரவி பிஷ்னாய் இந்த அணியில் இடம்பெறவில்லை.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

வேகப்பந்துவீச்சில் முதன்மை வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். முகமது ஷமியை தேர்வு செய்ய விருப்பம் தான், ஆனால் அவர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் பிசிசிஐ அவரை பயன்படுத்த விரும்பாது நெஹ்ரா கூறியுள்ளார்.

 நெஹ்ரா அணி

நெஹ்ரா அணி

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வென்ற சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங், தீபக் ஹூடா, புவனேஸ்வர் குமார்.

Story first published: Saturday, September 10, 2022, 22:35 [IST]
Other articles published on Sep 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+