Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா

மும்பை : உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறுவாரா? மாட்டாரா? இது தான் இன்று இந்திய கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம்.

ஷேன் வார்னே, கும்ப்ளே, கங்குலி, கவாஸ்கர் என பல முன்னாள் வீரர்களும் இதப் பற்றி பேசி முடித்த நிலையில், ஆஷிஷ் நெஹ்ரா தன் பாணியில் ரிஷப் பண்ட் ஏன் உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட வேண்டும் என நான்கு காரணங்களை கூறினார். மேலும், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் அணியில் எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

இடது கை பேட்ஸ்மேன்

இடது கை பேட்ஸ்மேன்

நெஹ்ரா சொல்லும் முதல் காரணம், ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேன். இந்திய அணியில் தற்போது தவான் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன். எனவே, ரிஷப் பண்ட் அணியில் இருப்பது வலது கை - இடது கை பேட்டிங் கூட்டணியை உருவாக்கும்.

எந்த இடத்திலும் ஆடுவார்

எந்த இடத்திலும் ஆடுவார்

நெஹ்ரா சொன்ன இரண்டாவது காரணம் - ரிஷப் பண்ட் முதல் ஏழு இடங்களில் எங்கே வேண்டுமானாலும் பேட்டிங் செய்வார், எந்த வீரருக்கும் மாற்றாக செயல்படுவார் ரிஷப் பண்ட்.

நினைத்த நேரத்தில் சிக்ஸ்

நினைத்த நேரத்தில் சிக்ஸ்

மூன்றாவது காரணம் - ரிஷப் பண்ட் நினைத்த நேரத்தில் சிக்ஸ் அடிக்கக் கூடியவர். இந்திய அணியில் தற்போது ரோஹித் சர்மாவுக்கு அடுத்து சிக்ஸ் அடிக்கும் திறன் ரிஷப் பண்ட்டிடம் தான் உள்ளது. உலகக்கோப்பையில் இது நிச்சயம் இந்திய அணிக்கு தேவை.

வெற்றி தேடிக் கொடுப்பார்

வெற்றி தேடிக் கொடுப்பார்

நான்காவது காரணம் - இந்திய அணியில் தற்போது போட்டியை வென்று கொடுப்பவர்களாக ரோஹித் சர்மா, கோலி, பும்ரா இருக்கிறார்கள். அந்த வரிசையில் நான்காவது வீரராக ரிஷப் பண்ட் இருப்பார் என நெஹ்ரா நான்கு காரணங்களை கூறினார்.

வித்தியாசமான வீரர்

வித்தியாசமான வீரர்

மேலும், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ் எல்லோரும் நல்ல வீரர்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி ஆடுகிறார்கள். அணியில் ஒரு வித்தியாசமான ஒருவர் தேவை. அது இவரிடம் உள்ளது என்றார் நெஹ்ரா.

தினேஷ் கார்த்திக் - பண்ட்

தினேஷ் கார்த்திக் - பண்ட்

தினேஷ் கார்த்திக் போன்ற அனுபவ வீரரின் இடத்தை ரிஷப் பண்ட்டிற்கு கொடுக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, தினேஷ் மிடில் ஆர்டரிலும், ரிஷப் பண்ட் மூன்றாவது துவக்க வீரராகவும் அணியில் ஆடலாம் என கருத்து கூறியுள்ளார் நெஹ்ரா.

மூன்று விக்கெட் கீப்பர்கள் தேவையா?

மூன்று விக்கெட் கீப்பர்கள் தேவையா?

அணியில் தோனியுடன், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் என மூன்று விக்கெட் கீப்பர்களை ஆட வைக்கலாமா? என்ற கேள்விக்கு, தோனி கீப்பிங் செய்ய உள்ளதால், தினேஷ், ரிஷப்பை பேட்ஸ்மேன்களாக கூட பார்க்கலாம் என்றார் நெஹ்ரா.

Story first published: Thursday, February 14, 2019, 18:59 [IST]
Other articles published on Feb 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+