
டிராவிட்டின் ப்ளான்
இந்திய அணி தற்போது டி20 கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை கண்காணித்து வருகிறது. இதற்கு காரணம் நவம்பரில் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் தான். இதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய ராகுல் டிராவிட் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பை தொடருக்காக டிராவிட் தேர்வு செய்துள்ள வீரர்களுக்கு, அனைத்து டி20 தொடர்களிலும் தொடர்ந்து வாய்ப்பு தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெஹ்ரா புதிய தகவல்
அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் பவுலர் முகமது ஷமி, ஒதுக்கப்பட்டுவிட்டதாக அஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முகமது ஷமி எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என தெரிகிறது. அவர் ஃபார்ம் அவுட் என நான் கூறவில்லை.

ஆதாரம் இதுதான்
ஷமி கடைசியாக கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய டி20 அணியில் இடம்பெறவே இல்லை. தொடர்ந்து டெஸ்ட் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறார். இதனால் இந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் இருக்க மாட்டார். அதே சமயம், அடுத்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் இருப்பார் எனத் தெரிகிறது.

எதிர்கால பவுலர்கள்
முகமது ஷமி தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக சென்றுள்ளார். அங்கு நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக, இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், ஆகியோர் எதிர்கால பவுலர்களாக உருவெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











