Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என் மனைவியிடமிருந்து நான் பிரிந்தது..” ஆஸ்திரேலிய துணை கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் விளக்கம்

மும்பை: ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரும், துணை கேப்டனுமான ஆஷ்லே கார்ட்னர், தனது ஓரின மனைவி மோனிகா ரைட்டுடனான விவாகரத்து பற்றியும், தன் மீது சுமத்தப்பட்ட துரோகக் குற்றச்சாட்டுகள் குறித்தும் முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

கடந்த மாதம், மோனிகா ரைட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஷ்லே கார்ட்னர் தனக்குத் துரோகம் இழைத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். சக கிரிக்கெட் வீராங்கனை ஜார்ஜியா வாலுடன் கார்ட்னருக்குத் தொடர்பு இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கார்ட்னர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை விமர்சித்தார். மேலும், கார்ட்னரின் துணை கேப்டன் பதவியைப் பறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Ashleigh Gardner Breaks Silence on Divorce and Allegations by Ex-Wife Monica Wright

இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ஆஷ்லே கார்ட்னர், "எனது மனைவியிடமிருந்து நான் பிரிந்தது எனது தனிப்பட்ட விஷயம் என்றாலும், நான் துணை கேப்டனாக இருப்பதால் எனது தற்போதைய உறவு நிலை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை நான் உணர்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், "மோனிகாவும் நானும் பகிர்ந்து கொண்ட நேரத்திற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன். மோனிகாவின் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகிறேன். இந்த விவகாரம் பற்றி இனி நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போதைக்கு இது குறித்து வேறு எந்தப் பொதுக் கருத்தையும் தெரிவிக்கப் போவதில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆஷ்லே கார்ட்னரும் மோனிகா ரைட்டும் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்தியாவில் நடைபெற்ற 2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின்போது இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிட்னியில் உள்ள வீட்டில் இருந்து கார்ட்னர் வெளியேறினார்.

ரன்னும் எடுக்கவில்லை.. விக்கெட் போகும் விதமும் சரியில்லை.. துருவ் ஜூரலுக்கு அணி நிர்வாகம் எச்சரிக்கை

ரன்னும் எடுக்கவில்லை.. விக்கெட் போகும் விதமும் சரியில்லை.. துருவ் ஜூரலுக்கு அணி நிர்வாகம் எச்சரிக்கை

தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு சர்ச்சைகள் இருந்தாலும், கார்ட்னருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக, பிக் பாஷ் லீக் தொடரில் அவர் விளையாடும் சிட்னி சிக்சர்ஸ் அணி அவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. களத்தில் மிகச்சிறந்த வீராங்கனையான கார்ட்னர், ஆஸ்திரேலிய அணி 7-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 13, 2026, 19:46 [IST]
Other articles published on Aug 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+