Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி பௌலர்ஸ்-க்கும் ஹெல்மட் கொடுங்க.. முகத்தை தாக்கிய ஸ்ட்ரைட் டிரைவ்.. தரையில் சாய்ந்த அசோக் டிண்டா

Recommended Video

அசோக் டிண்டாவின் முகத்தை தாக்கிய பந்து- வீடியோ

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணியில் ஆடியுள்ள, பெங்கால் அணி வீரர் அசோக் டிண்டா பயிற்சிப் போட்டியில் மோசமான முறையில் காயமடைந்தார்.

பேட்ஸ்மேன் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ் மிக வேகமாக டிண்டாவின் முகத்தில் தாக்கியது. பின்னர் மருத்துவமனைக்கு விரைந்தார் அவர்.

பயிற்சிப் போட்டியில் டிண்டா

பயிற்சிப் போட்டியில் டிண்டா

பெங்கால் அணி வீரர்கள், முஷ்டாக் அலி தொடரில் ஆட டி20 பயிற்சிப் போட்டியில் ஆடி வந்தனர். அந்த பயிற்சிப் போட்டியில் அசோக் டிண்டா பந்து வீசினார். எதிரில் விவேக் சிங் என்ற பேட்ஸ்மேன் ஆடி வந்தார்.

முகத்தில் தாக்கிய பந்து

அசோக் டிண்டா வீசிய ஒரு பந்தை ஸ்ட்ரைட் டிரைவ் ஆக அடித்தார் விவேக். அந்த பந்து மின்னல் வேகத்தில் அசோக் டிண்டா முகத்தில் தாக்கியது. உடன் டிண்டா கீழே விழுந்து விட்டார். இதை கண்ட பிசியோதெரபிஸ்ட் மற்றும் பிற வீரர்கள் விரைந்தனர்.

இரண்டு நாட்கள் ஓய்வு

இரண்டு நாட்கள் ஓய்வு

பின்னர் சமாளித்து எழுந்த அசோக் டிண்டா அந்த ஓவரின் மீத பந்துகளை வீசி முடித்து, மைதானத்தை விட்டு வெளியேறினார். மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்துப் பார்த்த பின்னர் அவரை இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் மருத்துவர்கள்.

நிம்மதி

நிம்மதி

அசோக் டிண்டாவுக்கு வேறு எந்த உள் காயமும் ஏற்படவில்லை என்பதால் நிம்மதி அடைந்துள்ளது பெங்கால் கிரிக்கெட் அணி. அசோக் டிண்டாவிற்கு தற்போது 34 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சாளர்களுக்கு ஹெல்மட்

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு தான் பாதுகாப்பு குறைவு என்ற நிலை மாறிவிட்டது. இனி பந்துவீச்சாளர்களும் தற்காப்புக்கு ஹெல்மட் போன்ற கவசங்கள் அணிந்து தான் ஆட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, February 12, 2019, 13:44 [IST]
Other articles published on Feb 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+