Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி!

அடிலெய்டு : ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் ஆகர் கேட்ச் பிடிக்கப் போய் நெற்றிப் பொட்டில் படுகாயம் அடைந்தார், இரத்தம் சொட்ட சொட்ட அவர் வெளியேறிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான மார்ஷ் ஒன்டே கப் தொடரில், வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா - சதர்ன் ஆஸ்திரேலியா இடையே ஆன போட்டி நடைபெற்றது.

அண்ணன் - தம்பி

அண்ணன் - தம்பி

இந்தப் போட்டியில் வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு ஆடினார் அண்ணன் ஆஷ்டன் ஆகர். சதர்ன் ஆஸ்திரேலியாவுக்கு ஆடினார் தம்பி வெஸ் ஆகர்.

அந்த கேட்ச்

அந்த கேட்ச்

வெஸ் ஆகர் பேட்டிங் செய்து வந்த போது ஒரு கேட்ச் கொடுத்தார். அந்த கேட்ச்சை பிடிக்க ஓடி வந்த ஆஷ்டன் ஆகர் பந்தை பிடிக்க முடியாமல் திணறி, தவறவிட்டார்.

படுத்து விட்டார்

படுத்து விட்டார்

பந்து அவரது நெற்றிப் பொட்டில் அடித்தது. அவர் கண்ணாடி அணிந்து இருந்ததால் அது உடைந்து, அவரது மூக்கிற்கு மேல் பதம் பார்த்தது. அவர் அப்படியே கீழே படுத்து விட்டார்.

மருத்துவ உதவி

மருத்துவ உதவி

சக வீரர் ஜை ரிச்சர்ட்சன் உடனடியாக மருத்துவ உதவிக் குழுவை அழைத்தார். தம்பி வெஸ் ஆகர் பதற்றத்தில் பேட்டை எறிந்து விட்டு ஓடி வந்தார்.

பதற வைக்கும் காட்சி

பின்னர், ஆஷ்டன் இரத்தம் சொட்ட, சொட்ட எழுந்து சென்றார். இந்த காட்சி நெஞ்சை பதற வைப்பதாக இருந்தது. தற்போது ஆஷ்டன் ஆகருக்கு தையல் போடப்பட்டு அவர் ஓய்வில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Story first published: Sunday, November 17, 2019, 17:58 [IST]
Other articles published on Nov 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+