Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக அணியை கிண்டலடித்த மும்பைக்காரர்.. களத்தில் குதித்த அஸ்வின், அபினவ் முகுந்த்.. தரமான பதிலடி!

சென்னை: தமிழக கிரிக்கெட் அணி சாதனை படைத்தது குறித்து இழிவாக பேசிய மும்பையை சேர்ந்த விமர்சகருக்கு அஸ்வின் உள்ளிட்ட தமிழக நட்சத்திரங்கள் தரமான பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சமீபத்தில் பிரமாண்ட சாதனைகளை படைத்திருந்தது.

அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான லீக் போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 50 ஓவரில் 506/2 ரன்களை குவித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500 ரன்கள் கடந்த முதல் அணியாக உலக சாதனை படைத்தது.

தமிழக அணி சாதனை

தமிழக அணி சாதனை

இந்த போட்டியில் தமிழக வீரர்கள் நாராயன் ஜெகதீசன் - சாய் சுதர்சன் ஆகியோர்

416 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 400 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என சாதனை படைத்தனர். 277 ரன்களை குவித்த நாராயண ஜெகதீசன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த முதல் நபராக சாதனை படைத்தார்.

மும்பையின் ஆதிக்கம்

மும்பையின் ஆதிக்கம்

இந்நிலையில் இந்த சாதனைகள் குறித்து மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வல்லுநர், மகராண்ட் வைய்ங்காங்கர் விமர்சித்திருந்தார். ட்விட்டரில் பதிவு போட்ட அவர், "88 வருட ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் தமிழ்நாடு 2 கோப்பைகளை மட்டுமே வென்றது" என கிண்டலடித்திருந்தார். இதற்கு தான் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.

தமிழக நட்சத்திரங்களின் பதில்

தமிழக நட்சத்திரங்களின் பதில்

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் அபினவ் முகுந்த், " 20 வருட விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் தமிழகம் 5 முறை கோப்பையை அடித்துள்ளது தெரியவில்லையா என்பது போன்று பதில் கொடுத்திருந்தார்". அதற்கு அந்த வல்லுநர் நான் இந்தியாவின் சாம்பியன்ஷிப் குறித்து பேசுகிறேன் எனக்கூற, மற்றொரு ரசிகர் " அப்போ விஜய் ஹசாரே என்ன செவ்வாய் கிரகத்திலா நடக்கிறது என பதிலடி கொடுத்திருந்தார்.

அஸ்வினின் பதிலடி

அஸ்வினின் பதிலடி

இதற்கு முன்னணி வீரர் அஸ்வினும் பதில் கொடுத்துள்ளார். அதில், ரஞ்சிக்கோப்பையில் 38 முறை கோப்பையை வென்ற மும்பை அணி மீது எனக்கே மரியாதை உள்ளது. ஆனால் விஜய் ஹசாரே தொடரின் போது ரஞ்சிக்கோப்பை பற்றி பேச வேண்டும். ஏன் ஜெகதீசன் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளி போடுகிறீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக சென்று விட வேண்டும். அபினவ் முகுந்த் கொடுத்த பதிலடி எனக்கு மிகவும் பிடித்தது என அஸ்வின் கூறியிருந்தார்.

Story first published: Wednesday, November 23, 2022, 21:05 [IST]
Other articles published on Nov 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+