டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை ஒன்றை எட்டியுள்ளார்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் தோய்வாக இருந்ததால் கடைசியில் பேட்டிங் செய்யும் அணிக்கு ரன் சேர்க்க மிகவும் கடினமாகும்.

இதனால் முதலில் பந்துவீச தள்ளப்பட்ட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் ஐ குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வின் இடம்பெறாத நிலையில் தற்போது அணிக்கு திரும்பினார். அஸ்வினை நீக்கியது தவறு என்பதை ரோகித் சர்மா உணரும் வகையில் அவர் இன்று செயல்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களான தேஜ்னரைன் சந்திர்பால் , கேப்டன் பிராத்வெயிட் ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வின் சீரான இடைவெளியில் வீழ்த்தினார். இந்த நிலையில் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற அல்சாரி ஜோசப் 4 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சின் ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்தார். இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார். மேலும் இந்தப் பட்டியலில் 16 வது இடத்தில் இருந்த தென்னாபிரிக்கா வீரர் ஸ்டெயினை அஸ்வின் பின்னுக்கு தள்ளினார். அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முரளிதரன் 1347 விக்கெட்டுக்களுடன் முதலிடத்திலும் வார்னே ஆயிரத்தில் ஒரு விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் ஆண்டர்சன் 975 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும் ,அணில் கும்ப்ளே 956 விக்கெட்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியர்கள் பட்டியலில் அணில் கும்ப்ளே முதலிடத்திலும், ஹர்பஜன்சிங் 711 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இந்த தொடர் முடிவதற்குள் அஸ்வின் ஹர்பஜன்சிங்கை முந்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 700 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருக்கின்றனர்.