இப்படி ஒரு காரணத்தை தூக்கிக்கிட்டு வர வேண்டாம்.. அக்சர் சொன்ன வார்த்தை.. அஸ்வினின் பதிலடி.. பரபரப்பு
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக அக்சர் பட்டேல் சொன்ன கருத்தும், இதற்கு அஸ்வின் கொடுத்த பதிலடியும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்தியாவிற்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது. இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
இதுவரை 4 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி 77 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட இங்கிலாந்து 405 ரன்கள் பின்னடைவை சந்தித்துள்ளது.

எப்படி
இந்த போட்டியில் முதல் இன்னிங்சியில் இங்கிலாந்து வெறும் 134 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பிட்ச் சரியில்லை என்று கூறி இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. பிட்ச் மோசமாக ஸ்விங் ஆகிறது, முழுக்க முழுக்க ஸ்பின் பிட்சாக இருக்கிறது.

குற்றச்சாட்டு
டெஸ்ட் போட்டிக்கு ஏற்றபடி பிட்ச் இல்லை. இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி பிட்ச் மாற்றப்பட்டு உள்ளது. இதனால்தான் எங்களால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்று இங்கிலாந்து அணி கூறியது. தங்களுடைய இயலாமையை சென்னை பிட்ச் மீது குற்றஞ்சாட்டி இங்கிலாந்து அணி தீர்த்துக் கொண்டது.

அக்சர் பட்டேல்
இந்த நிலையில் இதற்கு அக்சர் பட்டேல் பதிலடி கொடுத்துள்ளார். அதில் இந்த காரணத்தை சொல்லி இங்கிலாந்து அணி தப்பிக்க முடியாது. இதே பிட்சில்தான் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்பின் பவுலிங் செய்தனர். இங்குதான் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்தனர். ஆனால் அவர்கள் அவுட்டாகவில்லை.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா அவுட்டாகவில்லை. அஸ்வின் அதிரடியாக சதம் அடித்தார். சென்னையில் இங்கிலாந்து சொதப்பிய இதே பிட்சில்தான் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி விக்கெட் எடுத்தார். பேட்டிங்கும் செய்தனர். பிட்சை காரணம் காட்டி இங்கிலாந்து அணி தப்பிக்க முடியாது என்று அக்சர் பட்டேல் கூறினார்.

அஸ்வின்
இதேபோல் அஸ்வினும் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதில் வறட்சியான இதே பிட்சில் நான் 5 விக்கெட் எடுத்தும் சதமும் அடித்து இருக்கிறேன் என்று கிண்டலாக இங்கிலாந்து அணியை கலாய்த்து இருக்கிறார். அதாவது ஒரே பிட்சில் நான் 5 விக்கெட் எடுத்து 100 ரன்களும் எடுத்து இருக்கிறேன் என்று அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications