Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை பார்த்து எனக்கு பொறாமையா? அணியில் இடம் போன பிறகு என்ன ஆச்சு.. ஹர்பஜன் சிங் கருத்து

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங் விளங்கினார். ஆனால் அஸ்வின் 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் அணிக்குள் நுழைந்த பிறகு, ஹர்பஜனின் முக்கியத்துவம் குறைந்தது ஒரு கட்டத்தில் அணியில் தேர்வு செய்யப்படாமல் ஓரங்கட்ட பட்டார்.

இந்த தருணத்தில் ஹர்பஜன் எடுத்த ரெக்கார்டுகளை அஸ்வின் முறியடித்து 500 விக்கெட்டுகளுக்கு மேல் குவித்திருந்தார். மேலும் ஹரபஜன் சிங் எப்போதும் அஸ்வினை பாராட்டினாலும், சில சமயம் பொறாமை இருப்பது போல் பேசுவார். இந்த சூழலில் அஸ்வின் நடத்தி வரும் youtube சேனலில் ஹர்பஜன் சிங் பங்கேற்றார்.

Ashwin and Harbhajan singh

அப்போது கேள்வி கேட்ட அஸ்வின், கிரிக்கெட் அணியில் பொறாமை எந்த அளவுக்கு இருக்கின்றது. ஏனென்றால் மக்கள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை வேறு மாதிரி பார்ப்பார்கள், அணுகுவார்கள். நாம் உலகத்தை எப்படி அணுகுகிறோமோ அதுபோல்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என அவர்கள் நினைப்பார்கள்.

இதில் சிலர் உங்களுக்கு என்னை பார்த்து பொறாமை இருக்கிறது என்று கூறுகிறார்களே, அதைப் பற்றி உங்களுக்கு பதில் சொல்ல முடியுமா என்று அஸ்வின் கேட்டார். அஸ்வினின் இந்த கேள்வி ஹர்பஜனை கொஞ்சம் அதிர்ச்சி அடைய செய்தது. இதற்கு பதில் அளித்த அவர், நான் உன்னை பார்த்து பொறாமை பட்டேன் என்று நீ நினைக்கின்றாயா?

நான் உன்னுடன் அமர்ந்து இவ்வளவு நேரம் பல விஷயங்கள் குறித்து பேசினேன். அப்படி இருக்கும்போது நான் பொறாமைப்படும் நபர் என்று நீங்கள் எப்படி நினைத்தீர்கள் என கேட்டார். அதற்கு பதில் அளித்த அஸ்வின், அப்படி பொறாமை படுவது தவறு ஒன்றும் இல்லை.
அது மனிதனின் இயல்புதான்.

அப்படி நீங்கள் என் மீது பொறாமை பட்டாலும் அது நியாயம் தான் என்று நான் சொல்கின்றேன். நான் எதையும் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டேன். நாம் எல்லாம் மனிதர்கள் தான் என்று அஸ்வின் சமாதானம் படுத்தினார். தொடர்ந்து பேசிய அஸ்வின், இன்னும் சிலர் நான் வாஷிங்டன் சுந்தரின் வருகைக்கு பின் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றேன் என்று கூறுகிறார்கள் என்றார்.

Story first published: Sunday, July 20, 2025, 15:26 [IST]
Other articles published on Jul 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+