கண்ணை மூடிக்கிட்டு இறங்குறான்.. தோனி ஸ்டைலில் அஸ்வின்-பண்ட் பிளான்.. ரூட் கண்முன் நடந்த திக் சம்பவம்
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக அஸ்வின் மற்றும் பண்ட் ஆகியோர் இன்று வகுத்த திட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் இங்கிலாந்து திணறி வருகிறது.
4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து நிதானமாக ஆடி வருகிறது. 4 விக்கெட்டிற்கு இங்கிலாந்து 88 ரன்கள் எடுத்துள்ளது. ரூட், ஸ்டோக்ஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

எப்படி
இந்த நிலையில் இன்று காலையில் இங்கிலாந்து அணியில் டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங்கை தொடர்ந்தனர். நேற்று போட்டியின் போது லாரன்ஸ் தொடர்ந்து கிரீஸில் இருந்து இறங்கி வந்து பேட்டிங் செய்தார். ஸ்பின் பவுலிங்கை இறங்கி வந்து தொடர்ந்து அடித்தார்.

அஸ்வின்
இதனால் அஸ்வின் இவருக்கு பவுலிங் செய்யும் போது கொஞ்சம் திணறினார். லாரன்ஸ் இறங்கி வந்து பந்தை எதிர்கொள்கிறார், ஸ்பின் ஆவதற்கு முன் அதை அடிக்கிறார். இதனால் அஸ்வின் இவருக்கு எப்படி பவுலிங் செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் குழம்பினார்.

திட்டம்
இதையடுத்து இன்று காலையில் அஸ்வின் பண்ட் ஆகியோர் இதற்காக திட்டம் வகுத்தனர். அஸ்வின் பவுலிங் போடுவதற்கு முன் அஸ்வின் - பண்ட் இணைந்து இதற்காக திட்டம் வகுத்தனர். அதன்படி லாரன்ஸ் கண்ணை மூடிக்கொண்டு எந்த பந்து வந்தாலும் இறங்குகிறார்.

விக்கெட்
இதனால் அவரை ஸ்டம்பிட் செய்யலாம் என்று இருவரும் திட்டமிட்டனர். அடுத்த பந்திலேயே பந்தை ஸ்பின் செய்யாமல் தூக்கி காலுக்கு கீழ் அஸ்வின் வீசினார். பந்து திரும்பும் என்று நினைத்து லாரன்ஸ் ஏமாற்றம் அடைந்தார். இதனால் பந்து காலுக்கு உள்ளே சென்றது.

லாரன்ஸ்
லாரன்ஸ் காலுக்கு உட்பக்கத்தில் இருந்து வந்த பந்தை பண்ட் தாவி பிடித்தார். இதை அவர் கொஞ்சம் தடுமாறினாலும் உடனே சுதாரித்து ஸ்டம்பிட் செய்தார். தன் கண் முன்னே லாரன்ஸ் விக்கெட் விழுந்ததை பார்த்து ரூட் அதிர்ச்சி அடைந்தார். தோனி கீப்பராக இருந்த சமயத்தில் அஸ்வின், தோனி இப்படித்தான் திட்டமிட்டு விக்கெட் எடுப்பார்கள்.

தோனி
அதன்பின் கீப்பர்கள் எப்போதும் அஸ்வினுக்கு இப்படி உதவியதே இல்லை. இந்த நிலையில் தற்போது பண்ட் இதேபோல் செயல்பட தொடங்கி உள்ளார். பண்ட் அஸ்வினுக்கு களத்தில் அறிவுரை வழங்க தொடங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications