Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஓவர்களில் தலைகீழான ஆட்டம்.. அஸ்வின் - உமேஷ் ஜோடி காட்டிய மேஜிக்.. அரண்டுப்போன ஆஸ்திரேலிய அணி!

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் வெறும் நான்கே ஓவர்களில் இந்திய அணி ஆட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளனர். என்ன நடக்கிறது என புரியாமல் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிக ஸ்கோர் குவிக்கும் என எதிர்பார்க்கபட்ட சூழலில் ஏமாற்றமே மிஞ்சியது.

அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து சரிய முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் ரன்களை குவித்தது.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் உஸ்மான் கவாஜா 60 ரன்களையும், மார்னஸ் லபுசான்கே 31 ரன்களையும் அடிக்க அசால்ட்டாக இந்தியாவின் ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 156 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது. களத்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் இருந்தனர்.

வலுவான நிலை

வலுவான நிலை

இதனையடுத்து இன்று 2வது நாள் ஆட்டத்தில் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் சிரமப்பட்டார்கள். எந்தவித சிக்கலும் இன்றி பேட்டிங் செய்த அவர்கள் 40 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை சகஜமாக எடுத்துவிட்டனர். இதனால் முன்னிலையும் 70 ரன்களை தாண்டி சென்றுக்கொண்டே இருந்தது. இந்திய களத்தில் 100 ரன்கள் பின்னடைவுடன் இந்தியா இருந்தால் இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. எனவே 100 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியாதா? என்ற கவலை எழுந்தது.

சூப்பர் ட்விஸ்ட்

சூப்பர் ட்விஸ்ட்

இந்நிலையில் நான்கே ஓவரில் அனைத்தும் தலைகீழானது. செட்டில் பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்கோம்-க்கு எதிராக பந்துவீச வந்த அஸ்வின், ஆஃப் பிரேக் பந்தின் மூலம் விக்கெட் எடுத்து அசத்தினார். இதன் பின்னர் தான் ஆஸ்திரேலியாவின் சரிவு தொடங்கியது. அடுத்த ஓவரிலேயே வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவை ரோகித் களமிறக்கினார். வாய்ப்பை சரியாக பயன்படுத்திய உமேஷ் யாதவ் கேமரூன் கிரீனை வீழ்த்தினார்.

நான்கே ஓவர்கள்

நான்கே ஓவர்கள்

முக்கிய பார்ட்னர்ஷிப் உடைந்ததால் தொடர்ச்சியாக அஸ்வின் - உமேஷ் யாதவ் ஜோடி பந்துவீசினர். இதற்கான பலனாக அடுத்த 2 ஓவர்களிலும் அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க் என அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் 186 /4 என இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 197/10 என மாறியது. எனவே அனைவரும் எதிர்பார்த்தபடி வெறும் 88 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியாவால் முன்னிலை வைக்க முடிந்தது. இந்த 30 நிமிடங்களுக்குள் மட்டும் அஸ்வின் 3 விக்கெட்களும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்களும் எடுத்தனர்.

Story first published: Thursday, March 2, 2023, 11:45 [IST]
Other articles published on Mar 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+