ஏன் இதை பத்தியே திரும்ப திரும்ப பேசுறீங்க? பிரஸ் மீட்டில் கோபம் அடைந்த அஸ்வின்.. தரமான பதிலடி!
சென்னை: அகமதாபாத் பிட்ச் சர்ச்சை குறித்து கேள்விகளுக்கு தமிழக வீரர் அஸ்வின் கடும் கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.
இங்கிலாந்து இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்டுக்கு பின் அகமதாபாத் பிட்ச் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அகமதாபாத் பிட்ச் மோசமாக இருந்தது. பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக அமையவில்லை என்று இங்கிலாந்து அணி கூறி வருகிறது.
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தோல்வி அடைந்த நிலையில் ஐசிசி அமைப்பிடம் இங்கிலாந்து அணி அதிகாரபூர்வமாக புகார் அளிக்க உள்ளது. இந்த நிலையில் இந்த பிட்ச் சர்ச்சை குறித்து அஸ்வின் கருத்து கூறியுள்ளார்.

அஸ்வின்
அஸ்வின் அளித்த பேட்டியில், அகமதாபாத் பிட்சை பற்றி ஏன் இப்படி தவறாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அதில் தவறு இல்லை.

பிட்ச்
ஆனால் பிட்ச் குறித்து இவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லை மீறி போகிறது. ஏன் பிட்ச் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள். வேறு ஏதாவது நாட்டில் இப்படி நடந்து இருக்கிறதா? நாங்கள் வெளிநாடு டூர் செல்லும் போது இப்படி பேசி இருக்கிறோமா?

பெரிய பிரச்சனை
திடீரென இதை மட்டும் பெரிய பிரச்சனையாக்குவது ஏன்?நங்கள் நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடினோம் .அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மொத்தமாக 5 நாளில் முடிந்துவிட்டது. அதை பற்றி யாருமே பேசவில்லை.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில் நாங்கள் தோல்வி அடைந்த போது கோலி பிட்ச் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை. எங்களுக்கு எந்த பிட்சில் எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.

நல்ல பிட்ச்
இது நல்ல பிட்ச் இல்லை என்று சொல்கிறீர்கள் என்றால் எது நல்ல பிட்ச்? நல்ல பிட்ச் எப்படி இருக்கும்? இந்த கேள்விகளுக்கு நீங்கள்தான் பதில் அளிக்க வேண்டும், என்று அஸ்வின் கோபமாக குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications