Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபார்மிற்கு திரும்பிட்டாருங்கோ... முதல் இன்னிங்சில் அதிரடி... நாளைக்கு மீண்டும் வருவாருங்கோ!

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான பகலிரவு போட்டி அடிலெய்டில் இன்று துவங்கியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் போட்டியின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை அடித்துள்ளது.

இந்நிலையில் முதல் நாள் போட்டியின் இறுதியில் விளையாடிய ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின் 17 பந்துகளில் 15 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்தியா 233 ரன்கள்

இந்தியா 233 ரன்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் அடிலெய்டில் பகலிரவு போட்டி இன்று துவங்கி முதல் நாள் போட்டி முடிவடைந்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய நிலையில் முதல் நாள் போட்டி முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களை அடித்துள்ளது.

17 பந்துகள்... 15 ரன்கள்

17 பந்துகள்... 15 ரன்கள்

கடந்த ஆண்டுகளில் பேட்டிங்கில் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டை காட்டாத ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின் இன்றைய போட்டியின் இறுதியில் களமிறங்கி 17 பந்துகளில் 15 ரன்களை அடித்துள்ளார். இதில் ஒரு பவுண்டரியும் அடக்கம். அவர் அவுட்டாகாத நிலையில் நாளைய 2வது நாள் போட்டியின் துவக்கத்திலும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

27 ரன்கள் பார்ட்னர்ஷிப்

27 ரன்கள் பார்ட்னர்ஷிப்

மேலும் விரித்திமான் சாஹாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 27 ரன்களையும் அடித்துள்ளார். இன்றைய முதல் நாள் போட்டியில் இந்தியா தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மூன்றாவது செஷனில் விராட் கோலி சிறப்பாக ஆடிய நிலையில் அவரது ரன்-அவுட்டால் ஆஸ்திரேலியாவின் கை மேலோங்கியது.

நிதானமான ஆட்டம்

நிதானமான ஆட்டம்

இந்த பகலிரவு போட்டியில் வெற்றி பெற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தீவிரம் காட்டிவரும் நிலையில், போட்டியின் துவக்கத்தில் அடுத்தடுத்து துவக்க வீரர்களை இழந்த நிலையில் இந்தியா தடுமாற்றத்தை சந்தித்தது. ஆயினும் விராட் கோலி உள்ளிட்டவர்களின் நிதானமான ஆட்டம் வெற்றிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, December 17, 2020, 18:38 [IST]
Other articles published on Dec 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+