கிரிக்கெட்: 37 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!
கான்பூர்: சர்வதேச அளவில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளராக இந்திய அணியின் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இது இந்திய கிரிக்கெட் அணியின் 500-வது டெஸ்ட் போட்டியாகும்.

7-வது விக்கெட்டாக வில்லியம்சன்
இப்போட்டியின் தொடக்கத்தில் 36 டெஸ்ட் போட்டிகளில் 193 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் இந்திய அணியின் அஸ்வின். இன்று நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தி இப்போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அஸ்வின்.

யூனூஸ், லில்லி சாதனைகள் தூள்
ஏற்கனவே பாகிஸ்தானின் வாக்கர் யூனூஸ், ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி ஆகியோர் 38 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தனர். இன்று வாக்கர் யூனூஸ், லில்லி சாதனைகளை முறியடித்தார் அஸ்வின்.

2-வது இடம்
அதாவது 37 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 2-வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கிரிம்மேட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

ஆசியாவில் முதலிடம்
ஆசியா அளவில் தற்போது அஸ்வின்தான் மிகவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர்!
வாழ்த்துகள் அஸ்வின்!


Click it and Unblock the Notifications