For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2015 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி அஸ்வின் சாதனை !

By Karthikeyan

நாக்பூர்: 2015 ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 12 விக்கெட்டுக்களை வீழ்த்திய அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார். அவர், முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டும் கைப்பற்றினார்.

Ashwin becomes highest Test wicket taker of 2015

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது புதிய சாதனையிலும் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். நேற்றைய போட்டியில் ஜீன்-பால் டுமினியின் விக்கெட்டை எடுத்தபோது, இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்டின் சாதனையை அஸ்வின் முறியடித்தார்.

இந்தாண்டில் ஸ்டூவர்ட் 13 போட்டிகளில், 51 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதுவே ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டை வீழ்த்திய சாதனையாக இருந்தது. இதையடுத்து, 8 போட்டிகளில் 55 விக்கெட்டுகளை எடுத்து சாதனை பட்டியலில் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார்.

Ashwin becomes highest Test wicket taker of 2015

2011 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட்டில் அஸ்வின் எடுத்த விக்கெட் விவரம்:

2011 ஆம் ஆண்டில் முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் அஸ்வின். அந்த ஆண்டு 4 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை எடுத்தார். 2012ல் 8 போட்டிகளில், 37 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2013ல் 7 போட்டிகளில் பங்கேற்று 41 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். 2014ல் 4 போட்டிகளில், 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்தாண்டு 8 போட்டிகளில் பங்கேற்று அசத்தலாக 55 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றிய பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Ashwin becomes highest Test wicket taker of 2015

மேலும் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலருமானார் அஸ்வின், 2007-ம் ஆண்டு அனில் கும்ளே 49 விக்கெட்டுகளை ஒரு காலண்டர் ஆண்டில் கைப்பற்றி செய்த சாதனைக்குப் பிறகு அஸ்வின் தற்போது சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Story first published: Saturday, November 28, 2015, 0:21 [IST]
Other articles published on Nov 28, 2015
English summary
Ravichandran Ashwin became the highest Test wicket taker for this year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+