யோசிக்க கூட நேரமில்லை.. அஸ்வின் பவுலிங்கில் மிரண்ட இங்கிலாந்து.. தேசிய அளவில் வைரலான தமிழ் வார்த்தை!
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.
இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் தற்போது பேட்டிங் செய்ய முடியாமல் கடுமையாக திணறி வருகிறார்கள். 75 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து வீரர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய அணியில் அஸ்வின் 3 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார். இன்றும் அவர் 5 விக்கெட் எடுக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

அஸ்வின்
இங்கிலாந்து அணிக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அஸ்வினை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. சென்னை பிட்ச் தற்போது ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாறி உள்ளது. இதனால் அஸ்வின் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

பிட்ச்
நேற்றே பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஆதிக்கம் செலுத்தியது. இந்த நிலையில் இன்று அஸ்வின் இரண்டாவது ஓவரில் இருந்தே பவுலிங் செய்தார். அஸ்வின் போட்ட முதல் ஓவரில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். வரிசையாக இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சரித்தார்.

சிப்லி
டொமினிக் சிப்லி, லாரன்ஸ் இரண்டு பேருக்கும் அஸ்வின் கடுமையான நெருக்கடி கொடுத்து விக்கெட் எடுத்தார். அதன்பின் இந்திய அணிக்கு அச்சுறுத்தல் கொடுத்து வந்த ஸ்டாக்ஸை கிளீன் போல்ட் செய்தார். இதன் மூலம் வேகமாக 400 விக்கெட்டுகளை அஸ்வின் நெருங்கி வருகிறார்.

வைரல்
உலக அளவில் 2015ல் இருந்தே ஆதிக்கம் செலுத்தி தொடர்ந்து பார்மில் இருக்கும் ஒரே ஸ்பின் பவுலர் அஸ்வின் மட்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் கூட அஸ்வினை பவுலிங்கில் நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் அஸ்வினை பாராட்டும் வகையில் அண்ணா என்ற தமிழ் வார்த்தை தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

தமிழ் வார்த்தை
ஆஷ் அண்ணா என்ற வார்த்தை டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. சில தமிழக நெட்டிசன்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தினார்கள். இதன் பின்னர் தற்போது தேசிய அளவில் எல்லோரும் அஸ்வினை பாராட்டி இந்த வார்த்தையை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

டிரெண்ட்
தமிழர்கள் மட்டுமின்றி வட இந்தியர்களும் இதை டிரெண்ட் செய்து வருகிறார்கள். அஸ்வின் இன்று சிறப்பாக பவுலிங் செய்ததோடு கோலியையும் நன்றாக வழி நடத்தினார். பவுலிங் ரொட்டேஷன் பீல்டிங் செட்டப்பிலும் கோலிக்கு இன்று அஸ்வின் முறையாக அறிவுரை வழங்கினார்.


Click it and Unblock the Notifications