Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அபாரம்.. கபில்தேவ் சாதனையை முறியடித்தார்.. 2வது இந்தியர் என பெருமை

மொஹாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

430 விக்கெட் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அஸ்வின் களமிறங்கினார்.

மொஹாலியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. முதல் 2 நாள் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்பட்டது.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் பவுண்டரிகளை விளாசிய ஜடேஜா, 160 பந்துகளில் தன்னுடைய 2வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ஜடேஜா வழக்கம் போல் தனது பேட்டை சுழற்றி கொண்டாடினார். அத்துடன் ஜடேஜா நிற்கவில்லை. இதன் பின்னர் தான் அதிரடியை பறக்கவிட்டார். ஜடேஜா 175 ரன்கள் விளாச, இந்திய அணி 574 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

அஸ்வின் அபாரம்

அஸ்வின் அபாரம்

இதனையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அஸ்வின் சரியான கோட்டில் ஸ்டம்பை நோக்கி அஸ்வின் பந்துவீச, திரிமானே பேட்டால் தடுக்காமல் 17 ரன்களில் எல்.பி. டபிள்யூ ஆனார். தனஜெயா டி சில்வா 1 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். பிறகு ஜடேஜாவின் சுழலில் சிக்கிய இலங்கை முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

435 விக்கெட்

435 விக்கெட்

இதனையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற இலங்கை அணி , 2வது இன்னிங்சை தொடங்கியது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர் திரிமானேவை அஸ்வின் டக் அவுட்டாக்கினார். இதன் பின்னர் களமிறங்கிய நிசாங்காவை 6 ரன்களில் அஸ்வின் வெளியேற்றினார். அசலங்காவை 20 ரன்களில் வீழ்த்தியதன் மூலம் 435வது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார்.

அஸ்வின் சாதனை

அஸ்வின் சாதனை

இதன் மூலம் தமிழக வீரர் அஸ்வின் 435 வது விக்கெட்டை கைப்பற்றி, கபில்தேவின் சாதனையை முறியடித்தார். கபில்தேவ் 227 இன்னிங்சில் 434 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அஸ்வின் 159 இன்னிங்சிலேயே கபில் தேவின் சாதனையை முறியடித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும் 2வது இடத்தில் அஸ்வினும், கபில்தேவ் இடத்தில் 3வது வீரரும் உள்ளனர்.

Story first published: Sunday, March 6, 2022, 14:48 [IST]
Other articles published on Mar 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+