For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அரையிறுதி போட்டியில், ஆட்டத்தின் போக்கை மாற்றப்போகிறார் அஸ்வின்: ஆஸி. மாஜி வீரர் வார்னிங்!

By Veera Kumar

சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை அரையிறுதி போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின்தான் முக்கிய துருப்பு சீட்டாக மாற உள்ளார், அணியின் போக்கை மாற்றக்கூடியவர் அவராக இருக்கப்போகிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், நியூ சவுத் வேல்ஸ் ரக்பி லீக் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்டூவர்ட் கிளார்க் தெரிவித்தார்.

அரையிறுதி போட்டி தொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஸ்டூவர்ட் கிளார்க் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலிய அணியில், ஒரு முழு நேர சுழற்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

உலக தரம் உள்ள வீரர்

உலக தரம் உள்ள வீரர்

சுழற்பந்து விஷயத்தில் மட்டும், ஆஸ்திரேலியாவை விட இந்தியா ஒரு படி மேலே நிற்கிறது. இந்தியாவில் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார். அஸ்வின் ஒரு உலக தரம் உள்ள சுழற்பந்து வீச்சாளர். ஆனால் ஆஸ்திரேலியாவில் அப்படி ஒரு உலக தரம் உள்ள சுழற்பந்து வீச்சாளர் இல்லை. அஸ்வின்தான் அந்த போட்டியை மாற்றப்போகும் துருப்பு சீட்டாக விளங்கப்போகிறார்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

முத்தரப்பு ஒருநாள் தொடரில் பார்த்ததைவிட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், சிறப்பாக செயல்படுகிறார்கள். மோகித் ஷர்மாவின் வருகை இந்திய பந்து வீச்சை பலமானதாக மாற்றியுள்ளது. உமேஷ் யாதவும் முன்னேறியுள்ளார். முகமது ஷமிதான், இந்திய அணியின் பவுலிங் முதுகெலும்பு.

ஆஸ்திரேலியாவில் வேகம்

ஆஸ்திரேலியாவில் வேகம்

ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க், ஜான்சன் போன்றோர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைவிட வேகமாக பந்து வீசுகிறார்கள். ஆனாலும், இந்திய பவுலர்கள், அவர்களுக்கே உரித்தான பாணியில், சிறப்பானவர்களாக உள்ளனர்.

முதலில் பேட் செய்வது அவசியம்

முதலில் பேட் செய்வது அவசியம்

சிட்னி பிட்ச் முன்பைவிட இப்போது வேகப்பந்து வீச்சுக்கு தக்கதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டாசில் எந்த அணி வென்றாலும், முதலில் பேட் செய்வது சிறப்பானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Story first published: Tuesday, March 24, 2015, 9:18 [IST]
Other articles published on Mar 24, 2015
English summary
Former Australia pacer Stuart Clark feels the advantage India have going into Thursday's semi-final is that they have "world class" off-spinner Ravichandran Ashwin in their ranks with the Michael Clarke-led side lacking a quality spinner.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+