Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்? அஸ்வின் சொன்ன பதில்

பெங்களூர்: உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்? என கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, காவிரி தண்ணீர் தான் எனது வெற்றிக்கு காரணம் என கூறியுள்ளார். இதை அரசியலாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. கடந்த ஆண்டு டெஸ்ட், ஒரு நாள் போட்டி, இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த விராட் கோஹ்லிக்கு சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது.

Ashwin comment regarding Cauvery water

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 2 சதம் அடித்ததுடன், 17 விக்கெட்களைக் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின், திலிப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு 'பாலி உம்ரிகர்' விருது மற்றும் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு 'திலீப் சர்தேஸாய்' விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினியரும் கலந்து கொண்டார். அப்போது அஸ்வினிடம், 'கர்நாடகா தண்ணீர் பி.எஸ்.சந்திரசேகர், பிரசன்னா உள்ளிட்ட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளது. கர்நாடகா தண்ணீரில் அப்படி என்ன இருக்கிறது? உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்?' என கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு கூலாக பதிலளித்த தமிழக வீரர் அஸ்வின், 'அரசியலாக்கி விட வேண்டாம். எங்களிடம் காவிரி தண்ணீர் உள்ளது. அதுதான் எனது வெற்றிக்காக காரணம் என நினைக்கிறேன்'என்றார்.

Story first published: Thursday, March 9, 2017, 23:48 [IST]
Other articles published on Mar 9, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+