கிரிக்கெட் உலகில் எந்த வீரரும் செய்யாத சாதனை.. மகுடம் சூடிய தமிழக வீரர்.. சென்னை ஹீரோ அஸ்வின்!
சென்னை: கிரிக்கெட் உலகில் இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையை தமிழக வீரர் அஸ்வின் இன்று சென்னை மைதானத்தில் படைத்து இருக்கிறார்.
சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் அதிரடி பவுலிங்கில் இங்கிலாந்து அணி
134 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 195 ரன்கள் பின்னடைவை சந்தித்துள்ளது.
அஸ்வின் மீண்டும் 5 விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார். இந்தியா தற்போது மீண்டும் பேட்டிங் செய்து வருகிறது.

சாதனை
கிரிக்கெட் உலகில் இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையை தமிழக வீரர் அஸ்வின் இன்று சென்னை மைதானத்தில் படைத்து இருக்கிறார். அதன்படி வெறும் 76 போட்டிகளில் அஸ்வின் 29 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். எந்த வீரரும் இந்த சாதனையை செய்யவில்லை.

டெஸ்ட் அறிமுகம்
டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனதில் இருந்தே இவரை விட யாரும் அதிக விக்கெட் எடுக்கவில்லை. இவரின் அறிமுகத்திற்கு பின் உலக அளவில் அதிக 5 விக்கெட் எடுத்த வீரர் அஸ்வின்தான் . இடையில் இவருக்கு அவ்வப்போது வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.

மறுப்பு
ஆனாலும் தற்போது தனது பார்மை திரும்ப பெற்று சர்வதேச அளவில் அஸ்வின் தன்னை மிக சிறந்த வீரராக உருவெடுத்து இருக்கிறார். இதேபோல் அஸ்வின் இன்று ஸ்டோக்ஸ், போர்ட் போன்ற இடதுகை வீரர்களை விக்கெட் எடுத்தார். இதன் மூலம் இன்னொரு புதிய சாதனையை அஸ்வின் செய்துள்ளார்.

சாதனை
இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக முறை இடதுகை பேட்ஸ்மேன்களை விக்கெட் எடுத்த ஒரே வீரர் அஸ்வின்தான் . இவர் எடுத்த விக்கெட்டுகளில் 200 விக்கெட்டுகள் இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட் ஆகும். உலகில் அஸ்வினின் இந்த சாதனையை வேறு எந்த வீரரும் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications