Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடித்து துவம்சம் பண்ணுங்க.. இந்திய வீரர்கள் யாரும் தொட முடியாத உயரத்தை தொட்ட தமிழர்.. அஸ்வின் அதிரடி

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அஸ்வின் அதிரடியாக கலக்கி உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அஸ்வின் அதிரடியாக ஆடி உள்ளார்.இந்திய அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

அஸ்வின் 106 ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

எப்படி

எப்படி

இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அஸ்வின் அதிரடியாக கலக்கி வருகிறார். நேற்று இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பவுலிங் செய்த அஸ்வின் 5 விக்கெட் எடுத்தார். வெறும் 48 ரன்கள் கொடுத்து மொத்தமாக இங்கிலாந்து அணியை காலி செய்தார்.

சாதனை

சாதனை

நேற்று அஸ்வின் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் 200 இடதுகை பேட்ஸ்மேன்களை விக்கெட் எடுத்தார். அதோடு 267 விக்கெட்டுகளை இந்திய மண்ணில் எடுத்து அஸ்வின் சாதனை செய்தார். அதன்படி வெறும் 76 போட்டிகளில் அஸ்வின் 29 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

அஸ்வின்

அஸ்வின்

எந்த வீரரும் இந்த சாதனையை செய்யவில்லை. இந்த நிலையில் அஸ்வின் இன்று இன்னொரு சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார். இன்று நன்றாக பேட்டிங் செய்த அஸ்வின் அரைசதம் எடுத்தார். இதன் மூலம் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்து அரைசதம் எடுத்த வீரர் என்ற சாதனையை அஸ்வின் நிகழ்த்தி உள்ளார்.

விக்கெட்

விக்கெட்

இதுவரை 6 முறை அஸ்வின் இப்படி 5 விக்கெட் எடுத்து 50 ரன்களும் எடுத்துள்ளார். இந்திய அணியில் அஸ்வின்தான் இந்த சாதனையை அதிக முறை செய்துள்ளார். இதேபோல் 5 விக்கெட் எடுத்து கபில் தேவ் 4 முறை அரைசதம் அடித்துள்ளார்.

ஜடேஜா

ஜடேஜா

ஜடேஜாவும் நான்கு முறை இதே சாதனையை செய்துள்ளார். சர்வதேச அளவில் இங்கிலாந்து ஜாம்பவான் இயான் போத்தம் 11 முறை இந்த சாதனையை செய்துள்ளார். ஷாகிப் அல் ஹசன் 9 முறை இந்த சாதனையை செய்து இருக்கிறார். இவர்களுக்கு அடுத்து அஸ்வின் உள்ளார்.

5 விக்கெட்

5 விக்கெட்

இந்த சதம் மூலம் 5 விக்கெட் எடுத்து 100 ரன்கள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இந்திய வீரர்கள் யாரும் இதுவரை இந்த சாதனையை செய்தது இல்லை.

Story first published: Monday, February 15, 2021, 15:48 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+