அஸ்வின் "வாவ்" சாதனை.. 54 டெஸ்ட்டுகளில் 300 விக்கெட் வீழ்த்தி புதிய வரலாறு!
நாக்பூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் மொத்தமாக எட்டு விக்கெட் எடுத்ததன் மூலம் இவர் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்திய வீரர் அஸ்வின் பெரும் கஷ்டத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார்.

ஜஸ்ட் 54 போட்டிகளில்
இதுவரை அஸ்வின் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் விக்கெட் வீழ்த்துவதில் புதிய சாதனை படைத்துள்ளார்.

குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்
53 போட்டிகளில் இவர் மொத்தம் 292 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார். தற்போது தனது 54வது போட்டியில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.

டென்னிஸ் லில்லி சாதனை
ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி 56 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகள் என்ற சாதனையை படைத்தார். அதைத்தான் தற்போது முறியடித்துள்ளார் அஸ்வின்.

புதிய உலக சாதனை
இந்த போட்டியில் 8 விக்கெட் எடுத்ததன் மூலம் அஸ்வின் இந்த சாதனையை முறியடித்துள்ளார். உலகிலேயே அதிவேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்த நபர்களின் பட்டியலில் அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications