Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்

அகமதாபாத்: அஸ்வின் சாதனை குறித்து மறைமுகமாக விமர்சித்த யுவ்ராஜ் சிங்கிற்கு அஸ்வினும் மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த 3வது டெஸ்ட்டில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 400 விக்கெட்களை எடுத்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்தார்.

அவரின் சாதனையை மறைமுகமாக யுவ்ராஜ் சிங் விமர்சித்திருந்தார். இந்நிலையில் அதற்கு அஸ்வினும் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளதால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நடந்து முடிந்தது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இதில் உலகில் அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 77 போட்டிகளில் அஸ்வின் ஆடி 2ம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் 72 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மறைமுக விமர்சனம்

மறைமுக விமர்சனம்

இது குறித்து ட்வீட் செய்திருந்த முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங், போட்டி 2 நாட்களில் முடிந்துவிட்டது. இது கிரிக்கெட்டிற்கு நல்லதா என தெரியவில்லை. இதுபோன்ற ஆடுகளத்தில் ஆடியிருந்தால் ஹர்பஜன் சிங், அனில் கும்ளே ஆகியோர் 800 விக்கெட்களை எடுத்திருப்பார்கள் என அஸ்வினை மறைமுகமாக விமர்சித்தார்.

பதிலடி

பதிலடி

இதற்கு பதிலடி தரும் வகையில் அஸ்வின் இன்று ட்வீட் செய்துள்ளார். அதில், பொருட்களை ஒருவரிடம் விற்க பல்வேறு வியூகங்கள் உள்ளன. அதுபோன்று தற்போது எண்ணங்களும் திணிக்கப்படுகின்றன. நாம் மற்றவரின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரை அது நமக்குதான் ஆபத்து.

சுய சிந்தனை

சுய சிந்தனை

நமது முடிவுகள் பெரும்பாலானோருக்கு எதிராக இருந்தாலும் நாம் நம் முடிவில் உறுதியாக நிற்க வேண்டும். வேறு யாராலும் இதுதான் சரியென திணிக்கப்பட்டிருக்காமல் சுயமான சிந்தனை வேண்டும். அது நமது முடிவு என யுவ்ராஜ் சிங்கிற்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Friday, February 26, 2021, 18:44 [IST]
Other articles published on Feb 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+