Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழர்கள் இந்த விஷயத்தில் கெத்துதான்.. வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின் போட்ட ஆட்டம்.. வைரல் வீடியோ!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தமிழக வீரர் அஸ்வின் களத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியது வைரலாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். முக்கியமாக இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.

குட்டி

குட்டி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தமிழக வீரர் அஸ்வின் களத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியது வைரலாகி உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் அஸ்வின் தற்போது ''குட்டி ஸ்டோரிக்காக'' வைரலாகி உள்ளார். இவர் தனது யூ டியூப் பக்கத்தில் குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் கிரிக்கெட் தொடர்கள் குறித்து பேசி வருகிறார்.

வைரல்

வைரல்

இந்த நிலையில் நேற்று அஸ்வின் சதம் அடித்ததும் குட்டி ஸ்டோரி என்ற வார்த்தை இணையம் முழுக்க வைரலானது. அதேபோல் அஸ்வினை பலரும் மாஸ்டர் என்று புகழ தொடங்கினார்கள். அதேபோல் ஐபிஎல் தொடரில் அஸ்வின் ஆடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கூட அஸ்வினை மாஸ்டர் படத்தின் போஸ்டரில் வைத்து எடிட் செய்து இருந்தது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் அஸ்வின் இன்று களத்தில் மாஸ்டர் படத்தின் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின் இன்று மைதானத்தில் நடனம் ஆடினார். கையை ஆட்டி விஜய் ஆடும் அதே பிரபல ஸ்டெப்பை இன்று அஸ்வின் ஆடினார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

ரஹானே

முன்னதாக மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டும் என்று ரஹானேவிற்கு அஸ்வின் பரிந்துரை செய்து இருந்தார். இன்னொரு பக்கம் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் வென்ற பின் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட தமிழக வீரர்கள் இதேபோல் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.

இந்தி

இந்தி

இந்த நிலையில் தமிழக வீரர்கள் மட்டுமே இப்படி எல்லாம் செய்ய முடியும் என்று டிவிட்டரில் பலர் குறிப்பிட்டு வருகிறார். அஸ்வின், நடராஜன் எல்லாம் களத்தில் தமிழில் பேசுகிறார்கள். போட்டிக்கு பின்பும் டீவியில் தமிழில் பேசுகிறார்.

வைரல்

இப்போது தமிழ் படங்களையும் வைரலாக்குகிறார்கள். வேறு மாநில வீரர்கள் எல்லாம் இப்படி இல்லை. தமிழர்கள் இந்த விஷயத்தில் கெத்துதான் என்று பலர் இணையத்தில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

Story first published: Tuesday, February 16, 2021, 16:38 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+