Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் வெளிப்படையா பேசினாரே.. அப்படி உருக்கமாக பேட்டி கொடுத்தாரே.. மனசு இறங்காத கோலி.. ஷாக்கிங்!

சென்னை: டெஸ்ட் அணியில் சிறப்பாக கலக்கி வரும் தமிழக ஜாம்பவான் அஸ்வினுக்கு மீண்டும் டி 20 அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் 5 டி 20 போட்டிகள் இந்தியா இங்கிலாந்து இடையே அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

அணி தேர்வு

அணி தேர்வு

இந்திய அணியில் நன்றாக பவுலிங் செய்து வரும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். டி 20 அணியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார்.

பேட்டிங்

பேட்டிங்

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினின் பவுலிங் சிறப்பாக இருந்தது. பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அஸ்வின் சிறப்பாகவே செயல்பட்டார். அஸ்வினின் பவுலிங் நன்றாக இருந்தாலும் அவரை இங்கிலாந்துக்கு எதிராக டி 20 தொடரில் கோலி தேர்வு செய்யவில்லை.

கேட்டார்

கேட்டார்

கடந்த டெஸ்ட் போட்டிக்கு பின் அஸ்வினே இது தொடர்பாக மறைமுகமாக கோரிக்கை வைத்து இருந்தார். இந்திய டி 20 அணியில் ஆட வேண்டும் என்று விரும்புகிறேன். லிமிட்டட் ஓவர் பார்மெட் போட்டிகளில் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உலகக் கோப்பை டி 20 தொடரில் எனக்கு ஆட விருப்பம் என்று அஸ்வின் குறிப்பிட்டு இருந்தனர்.

கோலி

கோலி

ஆனால் அஸ்வினின் இந்த கோரிக்கைக்கு கோலி செவி மடுக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் டி 20 அணிதான் உலகக் கோப்பை டி 20 தொடரிலும் ஆட வாய்ப்புள்ளது. இதே அணியைத்தான் கோலி பயன்படுத்துவார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இதனால் பெரும்பாலும் உலகக் கோப்பை டி 20 தொடரிலும் இவர்கள்தான் ஆடுவார்கள். இதனால் அஸ்வினுக்கு உலகக் கோப்பை டி 20 தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள். இவர் ஒருநாள் அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது.

Story first published: Sunday, February 21, 2021, 10:44 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+