ரசல் அர்னால்ட்
இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்ட் தற்போது காமெண்டரி செய்து கொண்டு இருக்கிறார். இலங்கை தமிழரான இவர் சமயங்களில் தமிழில் பேசி காமெண்டரி செய்வார். அதே போல் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழில் இவர் பிட்ச் ரிப்போர்ட் கொடுத்தார். இது மிகவும் வைரல் ஆனது. தமிழர்கள் மட்டும் இல்லாமல் பலரும் அதை ஷேர் செய்து இருந்தனர்.
அஸ்வின் டிவிட்
இந்த நிலையில் அவரின் தமிழ் காமெண்டரியை கலாய்த்து அஸ்வின் டிவிட் செய்துள்ளார். அதில் ''ரசல் உங்களுடைய தமிழ் காமெண்டரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது. அதே சமயத்தில் நீங்கள் டிவிட்டரில் செய்யும் வேடிக்கையான விஷயங்கள் இன்னும் காமெடியாக இருக்கிறது.'' என்று அவர் செய்த காமெண்டரியை சர்காஸமாக கிண்டல் செய்து இருக்கிறார்.
அஸ்வினுக்கு வாழ்த்து
அஸ்வின் சென்ற போட்டியில் 8 விக்கெட் எடுத்ததன் மூலம் அதிவேகமாக 300 விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். இந்த நிலையில் அஸ்வினை வாழ்த்தி ரசல் அர்னால்ட் ''உங்களுடைய சாதனைக்கு வாழ்த்துகள். இதேபோல கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுங்கள். என்னுடைய தமிழ் காமெண்டரியை காலையில் பாராட்டியதற்கு நன்றி'' என்று கூறினார்.
டிவிட்டர் வைரல்
இந்த நிலையில் பலரும் ரசலின் காமெண்டரிக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் இவர் '' கவிஞர் மயில் முத்துக்கு வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார். அவர் பேசியது தமிழ் பாடலை போல் இருப்பதால் அப்படி கூறியுள்ளார். அதேபோல் அவருக்கு இலங்கையில் மயில் என்ற பட்டைபெயரும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











