Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி சொல்லி எதுவும் நடக்கவில்லை.. நேராக பழைய கேப்டன் ரஹானேவிடம் சென்ற "ஆஷ்"..எல்லாம் இதுக்குத்தான்!

சென்னை: இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வரும் நிலையில் அஸ்வின் தற்போது துணை கேப்டன் ரஹானேவிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார்கள். இந்திய பவுலர்கள் எல்லோரையும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விட்டு விளாசிக்கொண்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக ஜோ ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் இரண்டு பேருமே களத்தில் உள்ளனர். ஜோ ரூட் 130 ரன்களை கடந்து ஆடி வருவதால் இந்திய அணி பவுலர்கள் கடுமையாக திணற தொடங்கி உள்ளனர்.

எப்படி

எப்படி

சென்னை பிட்ச் இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது என்றுதான் கூற வேண்டும். சென்னை பிட்ச் இன்று ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிட்ச் இப்போதுவரை பேட்டிங் செய்யவே சாதகமாக இருக்கிறது. பந்து பெரிதாக ஸ்விங் ஆகவில்லை.

ஸ்விங்

ஸ்விங்

அதேபோல் பந்து பெரிதாக பவுன்சும் ஆகவில்லை. பிட்சில் ஒரு சில இடங்களில் மட்டுமே பவுலிங் செய்ய வசதியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அஸ்வின் போன்ற பவுலர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

அஸ்வின்

அஸ்வின்

இதற்காக அஸ்வின் முதலில் கோலியிடம் ஆலோசனை கேட்டார். எங்கே பிட்ச் செய்வது, எவ்வளவு வேகத்தில் வீசுவது என்று ஆலோசனை கேட்டார். இதற்கு ஏற்றபடி கோலி பீல்டிங்கும் செட் செய்தார். ஆனால் இது இந்திய அணிக்கு உதவவில்லை.

இந்திய அணிக்கு பல அளிக்கவில்லை

இந்திய அணிக்கு பல அளிக்கவில்லை

முக்கியமாக கோலி கொடுத்த அறிவுரைகள் பெரிய அளவில் அஸ்வினுக்கு உதவியாக இல்லை. விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வரும் நிலையில் அஸ்வின் தற்போது துணை கேப்டன் ரஹானேவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். எந்த இடத்தில் பிட்ச் செய்ய வேண்டும், எப்படி வீச வேண்டும் என்று ரஹானேவிடம் அஸ்வின் கேட்டார்.

ரஹானே அஸ்வின்

ரஹானே அஸ்வின்

கிட்டதட்ட நீண்ட நேரம் அஸ்வின் - ரஹானே ஆலோசனை செய்தனர். ரஹானே பொதுவாக பவுலர்கள் கேப்டன். இவர் பவுலர்களுக்கு கொடுக்கும் அறிவுரைகள் பெரிய அளவில் உதவும். ஆஸ்திரேலிய தொடரில் இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தவே ரஹானேதான் காரணம்.

காரணம்

காரணம்

இதனால் ரஹானேவிடம் நேரடியாக சென்று அஸ்வின் அறிவுரை கேட்டுள்ளார். பிட்ச் இன்னும் கொஞ்ச நேரத்தில் பவுலிங் செய்ய சாதகமாக மாறும். இதனால் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா பக்கம் திரும்பும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, February 6, 2021, 11:36 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+