Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“முன்பு மன்கட்.. தற்போது எல்.பி.டபள்யூ..” அஸ்வின் கூறிய முக்கிய பரிந்துரை.. அட இது நல்லா இருக்கே!

சென்னை: எல்.பி.டபள்யூ முறையில் மாற்றத்தை கொண்டே வந்து தீர வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார்.

Recommended Video

Pakistan-ஐ முந்திய Indian Team! ICC Ranking-ல் உச்சம் | Aanee's Appeal | *Cricket

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அஸ்வினின் முறையீடு

அஸ்வினின் முறையீடு

இந்த போட்டியில் ஜடேஜா நடத்திய பவுலிங் போராட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஜடேஜா வீசிய பந்துகளை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் எவ்வித சிரமும் இன்றி ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ரன் குவித்தார். பல முறை அவுட்டாகியிருக்க வேண்டும். ஆனால் ஜடேஜா போடும் லெக் ஸ்பின்னானது, லெக் ஸ்டம்ப் லைனுக்கு வெளியில் பிட்ச் ஆனதால் அவுட் கொடுக்கப்படவில்லை.

எல்.பி.டபள்யூ மாற்றம்

எல்.பி.டபள்யூ மாற்றம்

இந்நிலையில் இனி லெக் ஸ்டம்பிற்கு வெளியில் சென்றாலும் அவுட் கொடுக்க வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஜடேஜா போட்ட பந்தை 10 முறை ஜோ ரூட் ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே பந்து லெக் ஸ்டம்ப் லைனுக்கு உள்ளே பிட்ச் ஆனது. இந்த முறையை இனிமேல் மாற்றி அமைக்க வேண்டும்.

காரணம் என்ன

காரணம் என்ன

பவுலர்கள் ஓவர் வீசும்போது இடதுகையில் வீசுகிறோமா? வலதுகையா? எனக்கூறவில்லை என்றால் நோ பால் கொடுக்கின்றனர். ஆனால் வலதுகை பேட்ஸ்மேன் திடீரென இடதுபுறம் திரும்பி நின்று ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகின்றனர். எனவே இனி யாரேனும் திரும்பி நின்று ஆடினால், அவர்களை இடதுகை பேட்ஸ்மேனாகவே கருத வேண்டும். மேலும் லைனின் மையப்பகுதி மற்றும் லெக் ஸ்டம்பிற்கு வெளியில் எங்கு பட்டாலும் எல்.பி.டபள்யூ அவுட் கொடுக்க வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார்.

ஏற்கனவே உள்ள சர்ச்சை

ஏற்கனவே உள்ள சர்ச்சை

சர்வதேச கிரிக்கெட்டில் மன்கட் முறையை பயன்படுத்தி அஸ்வின் விக்கெட் எடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன்பின்னர் மன்கட் முறை ஐசிசி விதிகளின்படி நியாயமான ஒன்று தான் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் தற்போது எல்.பி.டபள்யூ முறையில் மாற்றம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 13, 2022, 18:16 [IST]
Other articles published on Jul 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+