டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த சம்பவம்.. ஆஸி.யின் வெற்றி திட்டத்தை வீழ்த்தியது எப்படி.. அஸ்வின் மாஸ் பேட்டி
சிட்னி: சிட்னியில் ஆஸ்திரேலியாவின் பவுலிங்கை எதிர்கொண்டு ஆடுவது என்பது
அத்தனை எளிதான விஷயம் கிடையாது என்று அஸ்வின் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் பரபரப்பான ஆட்டத்திற்கு
பின் டிராவில் முடிந்தது. அஸ்வின் - விஹாரி சிறப்பான ஜோடி அமைத்து இந்திய
அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றி உள்ளனர்.
அஸ்வின் 128 பந்தில் 39 ரன்கள் , விஹாரி 161 பந்தில் 23 ரன்கள் எடுத்து
இந்திய அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டு டிரா செய்தனர். இந்திய
அணி 131 ஓவருக்கு 5 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா ஆனது.

பேட்டி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் இது
தொடர்பாக அஸ்வின் பேட்டி அளித்துள்ளார். அதில், டிரெஸ்ஸிங் ரூமில்
எல்லோரும் உற்சாகமாக உள்ளனர். டிரெஸ்ஸிங் ரூம் சூழ்நிலை நன்றாக உள்ளது.
டெஸ்ட் போட்டி ஒன்று டிரா ஆவது அபூர்வம். கடைசி கட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.

புஜாரா
போட்டிக்கு பின் புஜாராவிடம் சென்று, நீ என்னை ஆற்றில்
இறக்கிவிட்டுவிட்டாய் என்று கிண்டலாக கூறினேன். கும்மின்ஸ் மிகவும்
வித்தியாசமாக பவுலிங் செய்தார். அவரின் பந்து வித்தியசமாக பவுன்ஸ் ஆனது.
இதை எதிர்கொள்ள கடினமாக இருந்தது.

பும்ரா
பும்ராவின் பவுலிங்கை வலைப்பயிற்சியில் எதிர்கொள்ள கடினமாக இருக்கும். அது
பலன் கொடுத்தது. இந்திய அணியில் இருக்கும் பவுலர்கள் 150 கிமீ வேகத்தில்
பந்து வீச கூடியவர்கள். நான் வலைப்பயிற்சியில் நன்றாக பேட்டிங் செய்தேன்.
இதன் மூலம் இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் நன்றாக பேட்டிங் செய்ய முடிந்தது.

சிட்னி
400 ரன்களை சிட்னியில் சேஸ் செய்வது என்பது அத்தனை எளிதான விஷயம் கிடையாது.
பந்து வேறு மேலும், கீழும் சென்று கொண்டு இருந்தது. பண்ட், புஜாரா
விக்கெட்டிற்கு பின் வெற்றி வாய்ப்பு குறைந்தது. அதிலும் விஹாரி காயம்
அடைந்த பின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது .

டிரா
இதனால் டிரா செய்யும் முடிவிற்கு வந்தோம். விஹாரியின் ஆட்டம் சதம்
அடித்ததற்கு இணையானது. நான் சிட்னியில் விளையாடிய போதெல்லாம் அரைசதம்
எடுத்து இருக்கிறேன் . சிட்னியில் நான் எப்போதும் சிறப்பாக விளையாடி
இருக்கிறேன், என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications