Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின்தான் வேண்டும்.. கடைசி நேரத்தில் டிராவிட். எடுத்த முடிவு.. பின்னணியில் நடந்தது இதுதான்

கவுஹாத்தி : 2023 உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து அணியுடன் கவுஹாத்தியில் நடைபெற உள்ள பயிற்சிப் போட்டியில் ஆட உள்ளது. அதற்காக உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் கிளம்பிச் சென்றுள்ளனர்.

அந்த அணியுடன் அஸ்வினும் கவுஹாத்தி சென்றுள்ளார். அப்போதே அஸ்வின் கிட்டத்தட்ட உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவது உறுதி ஆகி விட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியிலும் அஸ்வின் பெயர் இடம் பெற்றுள்ளது. அக்சர் பட்டேல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Ashwin got selected for world cup as he flies with Team India

அக்சர் பட்டேல் காயம் : கடந்த இரு வாரங்கள் முன்பு 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் அக்சர் பட்டேல் மாற்று சுழற் பந்துவீச்சாளராக இடம் பெற்று இருந்தார். ஆனால், அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டது.

அனுபவ அஸ்வின் : அக்சர் பட்டேலுக்கு மாற்று வீரரை தேடியது இந்திய அணி. ஏற்கனவே அஸ்வின்-இடம் உலகக்கோப்பை தொடருக்கு அழைப்பு வரலாம் என சொல்லி வைத்து இருந்தது இந்திய அணி நிர்வாகம். அதே போல, ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அஸ்வின் பெயர் சேர்க்கப்பட்டது. நீண்ட காலம் கழித்து ஒருநாள் அணியில் இடம் பெற்றார் அஸ்வின்.

டிராவிட் எடுத்த முடிவு : அஸ்வினை பயிற்சியாளர் டிராவிட் தேர்வு செய்ய காரணம் அவரது அனுபவம் தான். டெஸ்ட் அணியில் மூத்த வீரராக இருக்கும் அஸ்வின், ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த அனுபவம் உள்ளவர். போட்டியின் போக்கை சரியாக கணிக்கும் ஆற்றல் கொண்டவர்.

அஸ்வின் செயல்பாடு : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆடிய அஸ்வின், அதில் நான்கு விக்கெட்களை வீழ்த்தியும், ஓவருக்கு 5 ரன்கள் என்ற அளவில் பந்துவீசியும் ஒருநாள் போட்டி சூழலில் தன் திறமையை நிரூபித்தார்.

ஒகே சொன்ன ரோஹித் : அக்சர் பட்டேல் காயம் முழுமையாக குணமடையாத நிலையில் அவரை அணியில் சேர்த்தால் உலகக்கோப்பை தொடரின் இடையே அணித் தேர்வில் சிக்கலாகி விடும். அதைக் கருத்தில் கொண்டே அவருக்கு சிறந்த மாற்று வீரரான அஸ்வினை தேர்வு செய்துள்ளார் டிராவிட். கேப்டன் ரோஹித் சர்மாவும் இந்த தேர்விற்கு சம்மதம் கூறி இருக்கிறார்.

2023 உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ள இந்திய அணி விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

Story first published: Thursday, September 28, 2023, 17:51 [IST]
Other articles published on Sep 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+