அஸ்வினுக்கு சுளுக்கு... 2வது ஒரு நாள் போட்டியில் ஹர்பஜன் சிங் சேர்ப்பு
கான்பூர்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சுளுக்கு ஏற்பட்டதால் அவரது இடத்தில் ஹர்பஜன் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று கான்பூரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது அஸ்வினுக்கு சுளுக்கு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து அடுத்த போட்டிக்கான அணியில் ஹர்பஜன் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று அஸ்வின் தனது 100வது ஒரு நாள் போட்டியில் ஆடினார். அவர் 3.4 ஓவரில் பந்து வீசிக் கொண்டிருந்தபோது பேட்ஸ்மேன் அடித்த பந்தை பிடிக்க முயற்சித்தபோது கையில் சுளுக்கு ஏற்பட்டு விட்டது. இதனால் பாதியிலேயே அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அஸ்வினின் 4வது ஓவரின்போது இந்த சம்பவம் நடந்தது. ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த அஸ்வின் மறுபடியும் ஒரு ஓவர் மட்டும் வீசி விட்டு மீண்டும் திரும்பிச் சென்றார்.
இதையடுத்து இந்தூரில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் ஒரு நாள் போட்டியில் அஸ்வினுக்குப் பதில் ஹர்பஜன் சிங் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications